சென்னையில்.. கொரோனா சிகிச்சையில்.. 'அந்த' ஐபிஎல் வீரர் - மெகா வாய்ப்பு போச்சே!

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரருமான டிம் செய்ஃபெர்ட் தொடர்ந்து சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் வீசும் கொரோனா 2வது அலை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை, மருந்துக்கு பற்றாக்குறை என்று நாடே திண்டாடி வருகிறது.

45 நிமிடம்.. அப்படியே கதிகலங்கிய சிஎஸ்கே.. தோனி தந்த அட்வைஸ்.. வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள்

இந்த சூழலில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் நடந்து வந்த ஐபிஎல் 2021 தொடரில் கலகத்தை ஏற்படுத்தியது கொரோனா. கடுமையான பயோ-பபுள் பாதுகாப்பையும் உடைத்து, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட, ஐபிஎல் தொடரையே தற்காலிகமாக நிறுத்தியது பிசிசிஐ

 மூன்றாவது வீரர்

மூன்றாவது வீரர்

கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி முதல் ஆளாக பாதிக்கப்பட, அதே அணியில் அடுத்தடுத்து நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் மூன்றாவது வீரராக பாதிக்கப்பட்டவர் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபெர்ட். கடந்த மே 8ம் தேதி இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாக மருத்துவக் குழு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது.

 எப்போது வெளியேறுவார்?

எப்போது வெளியேறுவார்?

எனினும், பெரியளவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அதாவது, பாதிப்பு வீரியம் அதிகமாக இல்லை. ஆக்சிஜன் வைக்கும் அளவுக்கு நிலைமை இல்லை. அதேசமயம், அவருக்கு சென்னையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எப்படியும் 15 நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகே டிம் சென்னையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார் என்று தெரிகிறது.

 கொரோனா கொடுமை

கொரோனா கொடுமை

இதனால், சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியில் அவர் இடம் பிடிப்பது கேள்விக்குறியாகி உள்ளது. கொல்கத்தா அணியிலேயே அவர் வாய்ப்பின்றி பென்ச்சில் தான் உட்கார்ந்திருந்தார். அணியின் சும்மா இருந்தவருக்கு கொரோனா ஏற்பட, இப்போது தன் தேசிய அணியில், அதுவும் ஒரு முக்கிய போட்டியில் விளையாடும் அவரது வாய்ப்பும் மங்கிப் போய்விட்டது.

 மாலத்தீவில் இருந்து

மாலத்தீவில் இருந்து

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 5 நாட்களே ஆகியுள்ள நிலையில், எப்படியும் இன்னும் 10 நாளுக்கு அவர் சென்னையில் தான் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. அதேசமயம், இந்தியாவில் ஐபிஎல் தொடரில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் தற்போது மாலத்தீவில் தங்கியிருக்கும் நிலையில், அவர்கள் அனைவரும், இந்த வார இறுதியில், இந்தியாவுடான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
NZ Tim Seifert undergoing isolation in Chennai - ஐபிஎல் 2021
Story first published: Thursday, May 13, 2021, 13:26 [IST]
Other articles published on May 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X