For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்!

வெல்லிங்டன் : பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் தொடர்ந்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Recommended Video

IPL Names ஐ அப்படியே Copy செய்த Lanka Premier League | oneindia

இதுகுறித்து நான்கு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் உறுதியளித்துள்ளதாக கிரிக்கெட் நியூசிலாந்தின் தலைவர் டேவிட் ஒயிட் தெரிவித்துள்ளார்.

இந்த 4 நாடுகள் நியூசிலாந்தில் தொடர்ந்து 37 நாட்கள் நியூசிலாந்தில் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் ஒயிட் கூறினார்.

ஈஸியான மேட்ச்.. கோட்டை விட்ட பாகிஸ்தான்.. தோல்விக்கு காரணம் இதுதான்.. விமர்சகர்கள் விளாசல்!ஈஸியான மேட்ச்.. கோட்டை விட்ட பாகிஸ்தான்.. தோல்விக்கு காரணம் இதுதான்.. விமர்சகர்கள் விளாசல்!

நியூசிலாந்தில் மிகவும் குறைவு

நியூசிலாந்தில் மிகவும் குறைவு

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அங்கு இதுவரை 22 பேர்கள் மட்டுமே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். பாதிப்பும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. கொரோனாவால் அங்கு மக்களின் வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. மாறாக விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நியூசிலாந்தில் அடுத்தடுத்த தொடர்கள்

நியூசிலாந்தில் அடுத்தடுத்த தொடர்கள்

இந்நிலையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் தொடர்ந்து நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டு தொடர்களில் விளையாட உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் டேவிட் ஒயிட் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து கிரிக்கெட் ஆலோசனை

நியூசிலாந்து கிரிக்கெட் ஆலோசனை

நியூசிலாந்து வரும் 4 நாடுகளின் அணிகளை தனிமைப்படுத்துதல் உள்ளிட்டடவை குறித்து வெல்லிங்டனில் அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவர்கள் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்பட்டது போல பயோ பபள் முறையில் நடத்தப்படும் என்றும் கூறினார்.

அட்டவணை முடிவாகவில்லை

அட்டவணை முடிவாகவில்லை

நியூசிலாந்தில் இந்த நான்கு நாடுகளும் அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ள நிலையில், 37 நாட்கள் தொடர்ந்து இந்த போட்டிகள் நடைபெறும் என்று டேவிட் ஒயிட் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தொடர்களின் அட்டவணையை அவர் குறிப்பிடவில்லை. இவை இன்னும் இறுதிப்படுத்தப்பட வில்லை என்று அவர் கூறினார்.

Story first published: Tuesday, August 11, 2020, 12:22 [IST]
Other articles published on Aug 11, 2020
English summary
New Zealand Cricket Confirms Upcoming Tours To Go Ahead
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X