For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர் தோல்வி… கேப்டன் பதவியில் இருந்து கோலி திடீர் ராஜினாமா..? காரணம் ஏப்.1ம் தேதி

மும்பை:பெங்களூரு அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார் என்ற ஏப்ரல் 1ம் தேதி வெளியான செய்திகளால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போயினர்.

அதிக ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது. அணிகளின் வெற்றி, தோல்விகள், புள்ளி விவரங்கள் என ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு கணக்கை வைத்துக் கொண்டு மல்லுக்கட்டி வருகிறார்கள்.

அதிலும் அடுத்தகட்ட பரபரப்பாக உலக கோப்பை தொடர் வேறு வெயிட்டிங்கில் இருப்பதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ.. கொண்டாட்டம் தான். ஆனால்... அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், பிசிசிஐக்கும் பேரிடியாக ஒரு செய்தி வெளியானது.

எங்கப்பா கிறிஸ் கெயிலை காணோம்? ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் செய்த அஸ்வின்.. கடைசியில் ஏமாந்தது யார்? எங்கப்பா கிறிஸ் கெயிலை காணோம்? ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் செய்த அஸ்வின்.. கடைசியில் ஏமாந்தது யார்?

 கோலி ராஜினாமா?

கோலி ராஜினாமா?

ஐபிஎல் தொடர் தோல்விகளால் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகி விட்டார்.ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயினர் என்று செய்திகள் வெளியாகி இறக்கை கட்டி பறந்தன.

முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம்

பின்னர் விசாரித்து பார்த்த போது தான் தெரிந்தது.. அது ஏப்ரல் ஃபூல் செய்தி என்று. கிரிக்கெட் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்த இந்த முட்டாள்கள் தின செய்தியால் கிரிக்கெட் உலகம் இன்று மண்டை காய்ந்து தான் போனது.

சுவாரசியம் தான்

சுவாரசியம் தான்

சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். இந்த நாள் எப்படி வந்தது என்பதில் பல சுவாரசியங்கள் உள்ளன.

முட்டாளாக்கும் செய்திகள்

முட்டாளாக்கும் செய்திகள்

அது தொடர்பான ஏராளமான செய்திகள், சுவாரசியமான சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம். இந்த முட்டாள்கள் தினத்தில்... மற்றவர்களை முட்டாள்களுக்கும் செய்திகளுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்லலாம்.

வெறுத்துப்போன ரசிகர்கள்

வெறுத்துப்போன ரசிகர்கள்

விராட் கோலியின் விஷயத்தில் கூட பல முன்னணி செய்தி நிறுவனங்கள், நாளிதழ்கள் என ஒன்றுவிடாமல் இந்த செய்திக்கு காட்டிய அக்கறையால் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சிக்கே சென்றனர். பிறகு... அது ஏப்ரல் 1ம் தேதிக்கானது என்பது தெரிய வர.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்கள். அப்புறம் நெட்டில் அவர்கள் இது தொடர்பாக மற்றவர்களையும் பிராண்டி எடுத்து விட்டனர் என்பது தனிக்கதை.

இந்த முறை கோலி

இந்த முறை கோலி

உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றினாலும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது மட்டும் மறையவில்லை. இந்தியாவில் இந்த முறை விராட் கோலியை வைத்து அப்படி செய்து விட்டார்கள்.. வேறென்ன சொல்ல..?

Story first published: Monday, April 1, 2019, 23:14 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
On April 1, Virat Kohli resigned from the captaincy and his fans had gone through a little bit of false news.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X