For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்... சவுரவ் கங்குலி பிறந்தநாள்... வீரர்கள் வாழ்த்து

டெல்லி : முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தன்னுடைய 48வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்.

Recommended Video

Sourav Ganguly Birthday 2020 | Happy Birthday Ganguly

அவரை சக வீரர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களால் திக்கு முக்காட வைத்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல்லுக்குதான் முக்கியத்துவம்.. இந்த வருஷம் ஐபிஎல் இல்லாம முடியாது.. கங்குலி திட்டவட்டம்ஐபிஎல்லுக்குதான் முக்கியத்துவம்.. இந்த வருஷம் ஐபிஎல் இல்லாம முடியாது.. கங்குலி திட்டவட்டம்

பிசிசிஐ தலைவர் சவுரவ்

பிசிசிஐ தலைவர் சவுரவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தன்னுடைய 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடி மகிழ்ந்து வருகிறார். கேப்டனாகவும் வீரராகவும் இந்திய அணிக்கு இவர் அளித்தது ஏராளம். 113 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலியின் கேப்டன்ஷிப்பிலும் இந்தியா மிளிர்ந்தது.

டிவிட்டர் மூலம் வாழ்த்து

டிவிட்டர் மூலம் வாழ்த்து

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சவுரவ் கங்குலிக்கு கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சச்சின் உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கேப்டன் விராட் கோலி, இருவரும் கேக் வெட்டி கொண்டாடும்படியான புகைப்படத்தை பகிர்ந்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் வாழ்த்து

ஹர்பஜன் சிங் வாழ்த்து

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விரேந்தர் சேவாக், தன்னுடைய ஆரம்ப நாட்களில் ஆதரவாக இருந்த கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல ஹர்பஜன் சிங்கும் டிவிட்டர் மூலம் அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கங்குலியுடன் இணைந்து அவர் டான்ஸ் ஆடியுள்ளார்.

உண்மையான தலைவன்

உண்மையான தலைவன்

கங்குலியின் பிறந்தநாளையொட்டி தனது வீடியோ மெசேஜை டிவிட்டர் மூலம் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் இந்திய அணியை முன்னாள் இருந்து வழிநடத்தி வருவதாகவும் இதன்மூலம் உண்மையான தலைமை குறித்து தாங்கள் அறிவதாகவும் சேவாக்குறிப்பிட்டுள்ளார். கங்குலியிடம் இருந்து தான் அதிகமாக கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நாள் வீரர்கள் வாழ்த்து

இந்நாள் வீரர்கள் வாழ்த்து

இதேபோல முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லஷ்மன், முகமது கையிப் மற்றும் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, கே.எல். ராகுல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல் போன்றவர்களும் தங்களது வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளனர். சவுரவ் கங்குலி பயமில்லாதவர் என்றும் இந்திய அணியை மிகச்சிறந்த உயரத்திற்கு கொண்டு சென்றவர் என்றும் கே.எல். ராகுல் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, July 8, 2020, 19:51 [IST]
Other articles published on Jul 8, 2020
English summary
Sourav Ganguly turned 48 on Wednesday and wishes poured in for him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X