For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேக்கு விசில் போடுங்க..IPL வரலாற்றின் சிறந்த கம்பேக் நிகழ்ந்த தினம் இன்று..சபதம் நிறைவேறிய நாள்

மும்பை: ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் வேண்டுமானாலும், சிஎஸ்கே பிளே ஆப் சுற்றை விட்டு வெளியே போய் இருக்கலாம்.

இன்று தோல்வி அடைந்திருந்தால், பழைய வரலாறு இல்லை என்று ஆகிவிடுமா என்ன? அப்படி என்ன இன்று நடந்தது தெரியுமா?

எப்படி உலகித்தில் உள்ள எல்லா தங்கத்தையும் உனக்கு தருகிறேன் என்று ராக்கி பாய், தன் அன்ணைக்கு ஒரு சத்தியடததை கொடுத்தோரோ, அதே போல் ஒரு சத்தியத்தை தல தோனி ரசிகர்களுக்கு கொடுத்தார்.

செஸ்- பிரக்ஞானந்தாவை பாராட்டிய உலகின் 2ஆம் நிலை வீரர்.. இறுதிப் போட்டியில் தோற்றாலும் சாதனைசெஸ்- பிரக்ஞானந்தாவை பாராட்டிய உலகின் 2ஆம் நிலை வீரர்.. இறுதிப் போட்டியில் தோற்றாலும் சாதனை

தோனியின் சபதம்

தோனியின் சபதம்

இது குறித்து பார்ப்பதற்கு முன்பு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை சொன்னால் தான் சரியாக இருக்கும். ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் வழக்கில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்களில் உறவினருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, சம்பந்தமே இல்லாமல் சிஎஸ்கேக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே பங்கேற்கவில்லை.

வயதான அணி

வயதான அணி

அப்போது சபதமிட்ட தோனி, சிஎஸ்கே அணி மீண்டு வந்து சாம்பியன் பட்டத்தை பங்கேற்கும் என்று உறுதி பூண்டார். 2018ஆம் ஆண்ட சீசனுக்காக நடைபெற்ற ஏலத்தில், சிஎஸ்கே அணி வயதானவர்களை எல்லாம் எலத்தில் எடுத்ததாக விமர்சனம் எழுந்தது. டாடி ஆர்மி என சில ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இந்த அணி, பிளே ஆப்க்கு கூட செல்லாது என்று அனைவரும் விமர்சித்தனர்.

9 வெற்றிகள்

9 வெற்றிகள்

ஆனால், விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் தலை குணியும் படி செய்தது சிஎஸ்கே. அந்த சீசனில் 9 போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே, குவாலிபையர் 1 இல் வென்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக சென்றுவிட்டது. அப்போது அசுர பலத்தில் இருந்த ஐதராபாத்தை, சிஎஸ்கே வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

மே 27ஆம் தேதி 2018ஆம் ஆண்டு இதே நாளில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீசியது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கேவில் தொடக்க வீரர் வாட்சன், 51 பந்தில் சதம் விளாசினார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை மட்டுமெ இழந்து 18.3வது ஓவரில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக கைப்பற்றியது. தோனியும், தனது சத்தியத்தை நிறைவேற்றினார்.

Story first published: Friday, May 27, 2022, 20:25 [IST]
Other articles published on May 27, 2022
English summary
On this Day IPL –CSK Won the third championship after 2 years ban சிஎஸ்கேக்கு விசில் போடுங்க..IPL வரலாற்றின் சிறந்த கம்பேக் நிகழ்ந்த தினம் இன்று..சபதம் நிறைவேறிய நாள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X