For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை- தோனியின் பந்தம் தொடங்கி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது.. எப்படி நிகழ்ந்தது தெரியுமா?

சென்னை: இந்திய கிரிக்கெட் உலகில் சிறந்த கேப்டன், அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளும் வென்று தந்தவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் தோனி..

தோனியின் சொந்த ஊர் ராஞ்சியாக இருந்தாலும், அவர் சென்னையின் செல்லப் பிள்ளை..

தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்த பந்தம் தொடங்கவில்லை. அதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய வீராங்கனை.. தடைகளை தகர்த்த அஞ்சு பாபி ஜார்ஜ்.. குவியும் பாராட்டு! சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய வீராங்கனை.. தடைகளை தகர்த்த அஞ்சு பாபி ஜார்ஜ்.. குவியும் பாராட்டு!

டெஸ்ட் அறிமுகம்

டெஸ்ட் அறிமுகம்

ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் போட்டியில் நாட்டுக்காக விளையாடுவதே மிகப் பெருமையான தருணம். தோனி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் களமிறங்கி பெயர் வாங்கி சரியாக 12 மாதங்களுக்கு பிறகு தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னை

சென்னை

தனது வாழ்நாளின் முக்கியமான தருணத்தை அவர் சென்னையில் தான் தொடங்கினார். ஆம் தனது முதல் டெஸ்ட் போட்டியை இதே நாள் 2005ஆம் ஆண்டு தான் தோனி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடினார்.

மழை

மழை

இந்தப் போட்டியில் களமிறங்கிய போது தோனிக்கு தெரிந்திருக்காது. இந்த மண் தான் தம்மை தத்தெடுக்க போகிறது என்று..!! டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியும் தோனி களத்திற்கு செல்ல 3 நாட்கள் ஆனது. சென்னையில் அப்போது கன மழை பெய்தது. இதனால் போட்டியின் முதல் 3 நாட்கள் ஒரு பந்து கூட வீசப்படவில்லை

Recommended Video

Dhoni, Kohli Take Salary Cuts for CSK and RCB | IPL 2022 Retention | OneIndia Tamil
17 ஆண்டுகள்..

17 ஆண்டுகள்..

இதன் பின்னர் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து தடுமாறிய போது களத்திற்கு அறிமுக வீரராக வந்த தோனி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், தோனிக்கு மறக்க முடியாததாக அமைந்தது. சமீபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய தோனி, தமக்கும், சென்னைக்கும் இடையிலான பந்தம் ஐ.பி.எல். முன்பாகவே தொடங்கிவிட்டதாகவும், சென்னையில் தான் முதல் டெஸ்டில் விளையாடினேன் என்றும் கூறியிருந்தார். அந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது.

Story first published: Thursday, December 2, 2021, 18:39 [IST]
Other articles published on Dec 2, 2021
English summary
On This day Relationship between Chennai and Dhoni started 17 Years back. Dhoni Played his maiden test in Chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X