For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2019: சாம்பியன் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Recommended Video

TNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்!

சென்னை: டிஎன்பில் சாம்பியன் பட்டத்தை பெறும் அணிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டு கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்த தமிழ்நாடு ப்ரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. தமிழ்நாட்டு ஐபிஎல் என்று பெயர் பெற்ற இந்த போட்டிகளில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

அதில் ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் ஒவ்வொரு முறை மோத வேண்டும். முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். நடப்பு தொடரில் கோப்பையை தட்டிச் செல்லும் அணிக்கு பரிசுக் தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சாம்பியனாகும் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 60 லட்சம் அளிக்கப்படும். 3வது மற்றும் 4வது இடத்தை பெறும் அணிகளுக்கு தலா 40 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

தோத்துட்டா.. தோனி தான் காரணமா? இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? சீறும் அந்த சிங் தோத்துட்டா.. தோனி தான் காரணமா? இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? சீறும் அந்த சிங்

திண்டுக்கல் வெற்றி

திண்டுக்கல் வெற்றி

முன்னதாக, நேற்றைய முதல் போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி பெற்றது.

116 ரன்கள் இலக்கு

116 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்தது. இதனையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

சேப்பாக்கம் திணறல்

சேப்பாக்கம் திணறல்

திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், போட்டியில் வெற்றி பெறுவதை விட, விக்கெட்டுகளை தக்க வைப்பதிலேயே ஆர்வம் காட்டினர்.

105 ரன்கள் தான் எடுத்தனர்

105 ரன்கள் தான் எடுத்தனர்

முடிவில் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கடைசியில் பெரியசாமி 7 ரன்னுடனும், அலெக் சாண்டர் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

சிலம்பரசனுக்கு விருது

சிலம்பரசனுக்கு விருது

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளும், கவுசிக் மற்றும் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் , அபினவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இளம் பவுலர் சிலம்பரசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Story first published: Saturday, July 20, 2019, 12:16 [IST]
Other articles published on Jul 20, 2019
English summary
One crore rupees prize for TNPL champion in this season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X