For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது என்ன.. மன்கட்... பொல்லாத மன்கட்? தெரியாதவர்களுக்கு இது

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

மும்பை:ஐபிஎல் தொடர் மட்டுமல்ல... இனி பல காலம் அனைவரும் பேசும் விஷயமாகி விட்டது மன்கட் முறை. அதுபற்றி என்ன என்று தற்போது பார்க்கலாம்.

அப்படி என்ன செய்துவிட்டார்... இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்றையா அவர் பண்ணிவிட்டார்? என ஆளுக்கு ஒரு இணையத்தில் கம்பு சுற்றி வருகிறார்கள். எல்லாம் நம்மூர் நாயகன் அஸ்வின் பண்ணிய காரியம் தான். கிரிக்கெட் உலகம் இப்பவும் அவரை கரித்துக் கொண்டிருக்கிறது.

அவரை அனைவரும் வசை பாடும் இந்த மன்கட் முறை என்ன? எப்படி கிரிக்கெட் உலகில் இந்த முறை புகுந்தது என்பதற்கு நீண்ட நெடிய வரலாறே உண்டு. அவற்றை கொஞ்சம் பார்க்கலாம்...

தோனி ரசிகர்களே! இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொன்னாக் கேளுங்க.. அடம்பிடிக்கக் கூடாது!! தோனி ரசிகர்களே! இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொன்னாக் கேளுங்க.. அடம்பிடிக்கக் கூடாது!!

வரலாறு

வரலாறு

1947ல் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஸ்பின்னர் வினு மன்கட், ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுனை இதே பாணியில் அவுட் செய்கிறார். அதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இதே பில் பிரவுன் எனும் வீரரை மன்கட் இப்படி ரன் அவுட் செய்கிறார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இதனால் கொந்தளித்த ஊடகங்கள், விளையாட்டின் மாண்பை மன்கட் நாசம் செய்துவிட்டார் என்று விமர்சித்தன. ஆனால், இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் டொனால்ட் பிராட்மேன் மன்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.

சரியான செயல்

சரியான செயல்

கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு தானே அவர் அவுட் செய்த செயல் சரியானது தான் என்று பிராட் மேன் சப்போர்ட் செய்தார். அப்போதே ஆஸ்திரேலியா விதி முறைகளின்படி அவுட்டையும் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு தான் மன்கட் என்று இந்த முறைக்கு பெயர் வந்தது.

 மன்கட் அவுட் சர்ச்சை

மன்கட் அவுட் சர்ச்சை

இப்படி வீரர்கள் அவுட்டாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை நிகழ்ந்த போதும் அது தொடர்பான சர்ச்சைகள் மட்டும் குறையவே இல்லை. கபில் தேவ் முதல் பல வீரர்கள் இந்த முறையில் எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி இருக்கின்றனர். 2011ல் நடந்த தொடரின் போது அஸ்வின் இலங்கையின் திரிமன்னேவை அவுட் செய்தார். பின்னர் இந்திய சீனியர் வீரர்கள் ஆலோசித்து அவுட்டை வாபஸ் வாங்கிக்கொண்டனர்.

முதல் முறை

முதல் முறை

அதேபோல் பட்லரும் 2014ம் ஆண்டு இலங்கை உடனான ஆட்டத்தின் போது சசித்ர செனநய என்ற பந்துவீச்சாளரால் மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டார். பலமுறை அவுட் செய்யப்பட்டாலும் ஐபிஎல் சீசனில் இது முதல் முறை. அதுதான் இணைய வாசகர்களுக்கு வசதியாக போய்விட்டது.

ஐசிசி விதி

ஐசிசி விதி

ஐசிசியின் விதி 41.16ல் இதுபற்றி விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. பந்து வீசுபவர் கையில் இருந்து முழுமையாக பந்தை ரிலீஸ் செய்யும் முன்பு, நான் ஸ்டிரைக் முனையில் இருப்பவர் கிரீசை வெளியே செல்லக் கூடாது. அப்படி வெளியே சென்றால், பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய பவுலருக்கு முழு உரிமை உண்டு என்று விதி கூறுகிறது.

ஆதரவு குரல்

ஆதரவு குரல்

இந்தியா கிரிக்கெட் உலகில், முரளி கார்த்திக் 2 முறை எதிரணி பேட்ஸ் மேன்களை அவுட்டாக்கி இருக்கிறார். ஆக.. அஸ்வின் செய்தது ரொம்ப கரெக்ட்... என்று ஆதரவு குரலும் எழுந்து வருவதை மறுக்க முடியாது.

Story first published: Wednesday, March 27, 2019, 15:17 [IST]
Other articles published on Mar 27, 2019
English summary
Ashwin’s Mankading of Buttler quickly became a talking point across the cricketing world but it is a debate that has raged on since the original incident in 1947.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X