For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் வரலாற்றில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அரிய சம்பவம்.. இதை பாருங்க.. புரியும்..!!

டான்டன்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் தாமஸ், எதிர்பாராத விதமாக பேட்டை ஸ்டெம்பில் தட்டிய வீடியோ வைரலாகி இருக்கிறது.

வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் கோப் 96 ரன்களும், லெவிஸ் 70 ரன்களும், ஹெட் மெயர் 50 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து பேட் செய்த வங்கதேசம் யாரும் எதிர்பார்க்காத வகையில், 51 பந்துகள் மீதம் வைத்து, வெற்றிக்கான 322 ரன்கள் எடுத்து அசத்தியது. இதன் மூலம் நடப்பு தொடரில் 2வது வெற்றியை வங்கதேசம் பெற்றிருக்கிறது. அதிக பட்சமாக ஷாகிப் அல் ஹசன் 124 ரன்களும், லிட்டன் தாஸ் 94 ரன்களும் எடுத்தனர்.

அவரை வீட்டுக்கு அனுப்புங்க.. இவரை கொண்டு வாங்க.. இந்திய அணிக்கு வரப்போகும் லெஜண்ட்.. என்ன பின்னணி? அவரை வீட்டுக்கு அனுப்புங்க.. இவரை கொண்டு வாங்க.. இந்திய அணிக்கு வரப்போகும் லெஜண்ட்.. என்ன பின்னணி?

5வது பந்தில் நடந்தது என்ன?

5வது பந்தில் நடந்தது என்ன?

போட்டியின் முதல் இன்னிங்சின் 49வது ஓவரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஓவரை வங்கதேச வீரர் முஸ்பிகுர் ரஹீம் வீசினார். 5வது பந்தை எதிர் கொண்டவர் ஒசேன் தாமஸ். பந்தை அடிக்க முயன்று தாமஸ் அதை தவறவிட, பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது.

ஸ்டெம்பில் மோதிய பேட்

அப்போது எதிர்பாரதவிதமாக தாமஸின் பேட் ஸ்டெம்பில் பட, பெயில்ஸ் கீழே விழுந்தது. வங்கதேச வீரர்கள் அதை அவுட் அறிவிக்குமாறு நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் தாமஸ் பந்தை அடிக்க முயற்சி செய்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் போது தவறுதலாக பேட் ஸ்டெம்பில் பட்டதால் நாட் அவுட் என்று அவர்கள் அறிவித்தனர்.

1998ல் நடந்தது

1998ல் நடந்தது

இதேபோன்று 1998ம் ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அது. ஒரு முனையில் அணியின் நட்சத்திர பவுலர் ஷான் பாலக் பவுன்சராக பந்துவீசினார். அந்த பந்து நேராக மார்க் வாக்கை தாக்க, திணறிய அவர் நகர்ந்து செல்கிறார்.

அவுட் இல்லை

அவுட் இல்லை

அப்போது அவரது பேட் ஸ்டெம்பில் பட்டு பெயில்ஸ் கீழே விழுந்தது. அதை தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட் என முறையிட, நடுவர்கள் விதி எண் 35ன் கீழ், நாட் அவுட் என்று அறிவித்தனர். இந்த சம்பவத்தை தான் தற்போது கிரிக்கெட் வல்லுநர்கள் நினைவு கூறுகின்றனர்.

Story first published: Tuesday, June 18, 2019, 13:48 [IST]
Other articles published on Jun 18, 2019
English summary
Oshane Thomas hit wicket video goes viral against Bangladesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X