For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க ஜெயிச்சது இப்படித் தான்..! உலக கோப்பை சாம்பியன் குறித்து ஓபன் டாக் விட்ட மோர்கன்

Recommended Video

Eoin morgan : நாங்க ஜெயிச்சது இப்படித் தான் உலக கோப்பை சாம்பியன் குறித்து இங்கிலாந்து கேப்டன்-வீடியோ

லார்ட்ஸ்: பவுலர்களின் சிறப்பான செயல்பாடு மூலம் நியூசிலாந்து பேட்ஸ் மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி வெற்றி பெற்றதாக இங்கிலாந்து கேப்டன் இயர் மார்கன் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியான நேற்றைய போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்துக்கு நியூசிலாந்து வீரர்கள் தங்களது துல்லியமான பந்துவீச்சு மூலம் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

15 ரன்கள்

15 ரன்கள்

அதனால் கடைசி ஒரு ஒவருக்கு 15 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. சாம்பியனை தீர்மானிக்கும் இந்த முக்கியமான ஓவரை போல்ட் மிகவும் அற்புதமாக வீசினார்.

நியூசி. 15 ரன்கள்

நியூசி. 15 ரன்கள்

கடைசியில் ஒரு பந்து, 2 ரன்கள் என்ற நிலைஏற்படவே ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆனதால் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களம் இறங்கிய நியூசிலாந்தும் 15 ரன்களே எடுத்தது.

இங்கிலாந்து சாம்பியன்

இங்கிலாந்து சாம்பியன்

சூப்பர் ஓவரின் விதிப்படி அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் கிரிக்கெட்டை உலகிற்கே அறிமுகப்படுத்திய இங்கிலாந்து முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.

சவால்மிகுந்த இலக்கு

சவால்மிகுந்த இலக்கு

வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறியதாவது: ஆடுகளம் மோசம். நியூசிலாந்து 10ல் இருந்து 20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தாலும், சவாலான இலக்கு. எங்கள் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர்.

4 ஆண்டுகால உழைப்பு

4 ஆண்டுகால உழைப்பு

அதனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. விளையாட்டை பொறுத்த வரையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அது போல தான் இப்போது நடைபெற்றிருக்கிறது. இந்த கோப்பைக்காக 4 ஆண்டுகள் உழைத்து இருக்கிறோம். நியூசிலாந்துக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

Story first published: Monday, July 15, 2019, 11:28 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
Our bowlers made pressure to newzealand batsman’s says winning captain eoin morgan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X