For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிலாந்துக்கு எதிரா இந்தியா 3 நாள்ல தோத்துச்சு... அப்ப யாரும் வாயே திறக்கல... கோலி ஆதங்கம்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் 4வது டெஸ்ட் போட்டி நாளை துவங்கவுள்ளது.

இதையொட்டி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்திய அணியை பொருத்தவரை அணியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் பிட்ச் குறித்தெல்லாம் கவலை கொள்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Our strength is to focus on our team not the pitch -Virat Kohli says

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்து கேப்டன் விராட் கோலி பேசினார். பிட்ச் குறித்து அதிகமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும்நிலையில் அதுகுறித்து அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 நாட்களில் இந்தியா தோல்வியை சந்தித்ததை சுட்டிக்காட்டியுள்ள விராட் கோலி, அப்போது அந்த போட்டியின் பிட்ச் குறித்து யாரும் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது இந்திய பிட்ச் குறித்து அதிகமாக பேசப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை பொருத்தவரை அணியை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் பிட்ச் குறித்து கவலை இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Wednesday, March 3, 2021, 15:27 [IST]
Other articles published on Mar 3, 2021
English summary
When we lost against New Zealand, no one said anything about the Pitch -Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X