For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாய்ஸ்…. ஒழுங்கா விளையாடல.. நாம ஊர் போயி சேரமுடியாது..! வீரர்களுக்கு வார்னிங் தந்த கேப்டன்

லண்டன்: பாக்கி இருக்கும் போட்டிகளில் ஒழுங்காக விளையாட வில்லை எனில் யாரும் ஒழுங்காக ஊர் போய் சேரமுடியாது என்று வீரர்களுக்கு பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது கடுமையாக எச்சரித்துள்ளார்.

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. 5 போட்டிகளில் இதுவரை விளையாடி பாகிஸ்தான அணி 3 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே பாக்கி.

அந்த போட்டிகளில் வென்றாலும் செமி பைனலுக்குள் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஒவ்வொரு போட்டியின் போதும், கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு கணக்கிட்டு வருகிறார் பாக். தலைமை கோச் மைக் ஆர்தர். இந்தியாவுடனான போட்டியில் மழை குறுக்கிட்ட போது, பேப்பருடன் அவர் வளைய, வளைய வந்தது தனி ரகம்.

 உலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் - டிரிக் சிக்ஸ்.. யார் பாஸ் இவரு? அசத்தல் வீடியோ! உலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் - டிரிக் சிக்ஸ்.. யார் பாஸ் இவரு? அசத்தல் வீடியோ!

தோல்வியால் அதிருப்தி

தோல்வியால் அதிருப்தி

7வது முறையாக இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றிருப்பதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மீதமுள்ள 4 போட்டிகளிலும் மோசமான தோல்வியை அந்த அணியினர் சந்தித்தால் மக்களின் எதிர்ப்பு எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாது. (கடந்த காலங்களில் மோசமான தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணியினர் பல மாதங்கள் சொந்த நாட்டுக்குள் செல்லாமல் வெளிநாடுகளில் தங்கி இருந்தது நினைவிருக்கலாம்)

நுழைய முடியாது

நுழைய முடியாது

இந்நிலையில், கேப்டன் சர்பிராஸ் அகமது, அணி வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அதாவது மீதமுள்ள 4 போட்டிகளிலும் இதேபோன்று மோசமாக விளையாடி வந்தால், மக்கள் நம்மை நாட்டுக்குள் விட மாட்டார்கள்.

நமக்கு சவால்

நமக்கு சவால்

மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். யாராவது சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல நினைத்தால் முட்டாள்தனம். எனவே, அடுத்து வரக்கூடிய போட்டிகள் நமக்கு சவால். இந்த போட்டிகளில் வென்றாக வேண்டும். அதற்கு ஏற்றபடி, அணியில் உள்ளவர்கள் நிலைமையை உணர்ந்து விளையாட வேண்டும் என்றார்.

வாழ்வா? சாவா?

வாழ்வா? சாவா?

வரும் ஞாயிறன்று தென் ஆப்ரிக்காவை பாகிஸ்தான் சந்திக்கிறது. தென் ஆப்ரிக்காவும், பாகிஸ்தானும் புள்ளிகள் அடிப்படையில் சம நிலையில் உள்ளன. இது அணிகளும் தலா 3 போட்டிகளில் தோற்றிருக்கிறது. அது வாழ்வா, சாவா போட்டியாகும். தென் ஆப்ரிக்காவுக்கும் அப்படியே. எனவே, இரு நாட்டு ரசிகர்களும் அந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Story first published: Tuesday, June 18, 2019, 13:40 [IST]
Other articles published on Jun 18, 2019
English summary
Pak captain sarfaraz ahmed warned players to do well in upcoming matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X