எங்கல்யாணத்துக்கு கண்டிப்பா அவிய்ங்க வருவாய்ங்க..!! டீம் இந்தியாவுக்காக வெயிட் பண்ணும் பாக். வீரர்

இஸ்லாமாபாத்: எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்திய அணி வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கூறியிருக்கிறார்.

பாக். கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்தார். இந்த திருமணம் அப்போதே பெரியளவில் பேசப்பட்டது. அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந் நிலையில் அதே போன்றதொரு திருமணம் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது பாக். வீரர் அசன் அலியின் திருமணம் தான். அவர் ஹரியானாவை பூர்வீகமாக கொண்ட ஷமையா என்பவரை மணக்கிறார். இது ஒரு காதல் திருமணமாகும்.

3வது போட்டியில் 'ஷாக்' மாற்றங்கள்... முக்கிய வீரர்கள் இருவர் வெளியில்..? கோலியின் சூப்பர் பிளான்

ஹரியானா பெண்

ஹரியானா பெண்

ஷமையா ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு, தற்போது எமிரேட்ஸ் ஏர்லைன்சில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். ஹரியானா பூர்வீகம் என்றாலும் தற்போது பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறார்.

மகிழ்ச்சி அடைவேன்

இந்நிலையில் தனது திருமணம் குறித்து ஹசன் அலி கூறியதாவது: எனது திருமணம் துபாயில் நடக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். அவர்களுக்கு கட்டாயம் எனது திருமண அழைப்பிதழை அனுப்பி வைப்பேன். அவர்கள் விழாவில் கலந்து கொண்டால் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

ஆக. 20ல் கல்யாணம்

ஆக. 20ல் கல்யாணம்

ஹசன் அலி, ஷமையா திருமணம் ஆகஸ்ட் 20ம் தேதி துபாயில் உள்ள அட்லாண்டிஸ் பாம் ஹோட்டலில் நடைபெறுகிறது. திருமணத்தில் முக்கிய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வந்து வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர் நாயகன் விருது

தொடர் நாயகன் விருது

பாக். அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. 2016ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமாகி, அடுத்த ஆண்டிலேயே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருது பெற்றார். 2017ம் ஆண்டு அதி விரைவாக 50 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Pakistan bowler Hasan ali expects team India to attend his marriage.
Story first published: Tuesday, August 6, 2019, 16:04 [IST]
Other articles published on Aug 6, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X