For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள், பவுண்டரிகள் விளாசியது யார் தெரியுமா?.. சுவாரசியமான டேட்டா.

துபாய்: 'டி20 உலகக்கோப்பை 2021' கடைசியில் முடிவுக்கு வந்து விட்டது. ஐ.சி.சி.யின் முக்கியமான போட்டிகளில் எப்போதும் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆஸ்திரேலியா அணி முதன்முறையாக டி20 உலககோப்பையை வென்று 'நாங்கள் என்றும் கிங்தான்'' என்று நிரூபித்து விட்டது.

 'இது தான் கடைசி சான்ஸ்..' தலை மீது தொங்கும் கத்தி.. இந்த 5 இந்திய வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்? 'இது தான் கடைசி சான்ஸ்..' தலை மீது தொங்கும் கத்தி.. இந்த 5 இந்திய வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்?

ஐந்து 50 ஓவர் உலகோப்பையை கையில் வைத்திருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு டி20 உலககோப்பை எட்டாக்கனியாக இருந்து வந்தது. ''இதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க'' என்று கேலி, கிண்டல் பாய்ந்த வேளையில் ''பழைய ரெக்கார்ட்ஸ் எடுத்து பாரு தம்பி'' என்று தங்களுக்கே உரித்தான பாணியில் பதிலடி கொடுத்துள்ளது ஆஸி.

அதிக ரன்கள் இவர்தான்

அதிக ரன்கள் இவர்தான்

முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் ஆஸ்திரேலியாவை பாராட்டி வரும் நிலையில் இந்த உலககோப்பையில் நடந்த பல சுவாரசியமான சாதனைகளை இப்போது காண்போம். இந்த உலகோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். அவர் 303 ரன்கள் அடித்துள்ளார். 289 ரன்கள் எடுத்து டேவிட் வார்னர் 2-வது இடத்தில் உள்ளார். இலங்கையின் ஹசரங்கா 16 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். ஆஸி.யின் ஆடம் ஜாம்பா 13 விக்கெட்டுகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

ஜோஸ் பட்லர் 13 சிக்ஸர்கள்

ஜோஸ் பட்லர் 13 சிக்ஸர்கள்

இந்த தொடரில் ஒரே ஒரு சதம்( இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 101 ரன்கள் -நாட் அவுட் இலங்கைக்கு எதிராக) மட்டும்தான் அடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் அதிகப்சட்மாக ஜோஸ் பட்லர் 13 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக டேவிட் வார்னர் 32 பவுண்டரிகள் விளாசியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த (210-5) என்ற ரன்களே ஒரு இன்னிங்ஸின் அதிகபட்ச ரன்களாகும். நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்த மிட்செல் ஸ்டார்க் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டு கொடுத்தவர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

 டாஸ் முக்கிய பங்கு

டாஸ் முக்கிய பங்கு

இந்த உலககோப்பையில் அணிகள் வெற்றி பெற டாஸ் முக்கிய பங்கு வகித்துள்ளது. துபாயில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 10 ஆட்டங்கள் நடந்துள்ளன, இதில் சேஸிங் செய்த அணியே வென்றுள்ளது, அதில் 9 முறை டாஸ் வென்ற அணியை வென்றுள்ளது. பைனல், செமி பைனலிலும் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றது. இதுவரை நடந்த 7 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 6 முறை டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

T20 World Cup 2021: 4 Impressive Highlights! | Australia vs New Zealand | OneIndia Tamil
அதிகபட்ச சேஸிங் இதுதான்

அதிகபட்ச சேஸிங் இதுதான்

ஆஸ்திேரலிய அணி 173 ரன்களை விரட்டி சேஸிங் செய்ததே டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங்காகும். டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 31 பந்துகளில் அரைசதம் அடித்த ஆஸி. வீரர் மிட்ஷெல் மார்ஷ் பைனலில் வேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 85 ரன்கள் சேர்த்து இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற வகையில் மே.இ.தீவுகள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் சாதனையை சமன் செய்தார்.

Story first published: Monday, November 15, 2021, 13:50 [IST]
Other articles published on Nov 15, 2021
English summary
Pakistan captain babar azam has topped the list of highest run scorers in the T20 2021 World Cup. He has scored 303 runs. David Warner is in 2nd place with 289 runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X