For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது

லாகூர்: வரக்கூடிய உலக கோப்பையின் எல்லா போட்டிகளும் இந்தியாவுக்கு எதிரானவை தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ல் துவங்கி ஜூலை 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது.

1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலக கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட பெரும்பாலான அணிகள்... வீரர்கள் விவரத்தை வெளியிட்டுவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன.

10 அணிகள் பங்கேற்பு

10 அணிகள் பங்கேற்பு

இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தர வரிசைப்படி கலந்து கொள்கிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

பாக். அணி

பாக். அணி

இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி, உலககோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணியை சந்திக்கிறது. எதிராக 20 ஓவர், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்கிறது.

இந்தியாவுக்கு எதிரானவை

இந்தியாவுக்கு எதிரானவை

இத்தொடருக்கு முன்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்ப்ராஜ், உலக கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளுமே இந்திய அணிக்கு எதிரானது போன்றது தான்.

பாக். என்றால் பயம்

பாக். என்றால் பயம்

பாகிஸ்தானை பொறுத்த வரையில் உலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளுமே இந்திய அணிக்கு எதிரான போட்டியை போன்றது தான். சமீபகாலமாக பெரிய தொடரில் இந்தியாவை வீழ்த்தி இருப்பது பலம். எங்களை பார்த்து மற்ற அணிகள் பயந்துள்ளன. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பலம் தான் என்றார்.

Story first published: Monday, April 22, 2019, 23:41 [IST]
Other articles published on Apr 22, 2019
English summary
Sarfraz Ahmed issues massive warning to Indian team lead by Virat Kohli ahead of June 16 World Cup clash.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X