For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சோணமுத்தா போச்சா.. 447 கோடி கேட்டு அசிங்கப்பட்ட பாகிஸ்தான்.. பிசிசிஐ மீதான வழக்கில் தீர்ப்பு

துபாய் : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்தியாவின் பிசிசிஐ மீது இழப்பீடு கேட்டு ஐசிசியில் வழக்கு போட்டு இருந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது ஐசிசி.

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற இந்தியா ஒப்புக்கொண்டு பின்னர் மறுத்து விட்டதாக கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஐசிசியில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

நீண்ட காலம் கடந்த இந்த வழக்கில் பாகிஸ்தான் வாதம் செல்லாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது ஐசிசி.

தடைபட்ட இந்தியா - பாக். கிரிக்கெட்

தடைபட்ட இந்தியா - பாக். கிரிக்கெட்

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன உறவு மிக மோசமான நிலையை எட்டியது. அதன் பின் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பங்கேற்கும். இடையே 2012இல் சிறிய அளவிலான ஒரு தொடர் மட்டும் நடைபெற்றது.

பாகிஸ்தான் புகார் அளித்தது

பாகிஸ்தான் புகார் அளித்தது

அந்த காலத்தில் பிசிசிஐ சுமார் ஆறு இருதரப்பு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட ஒப்புக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டதாகவும், ஆனால், அதன் பின்னர் இந்தியா இருதரப்பு கிரிக்கெட் ஆட மறுப்பதாகவும் பாகிஸ்தான் புகார் கூறியது.

447 கோடி இழப்பீடு கேட்ட பாக்.

447 கோடி இழப்பீடு கேட்ட பாக்.

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட சுமார் 447 கோடி இழப்பீடு கேட்டு ஐசிசியில் வழக்கு தொடர்ந்தது பாகிஸ்தான். இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்தார். அவர் பாதுகாப்பு காரணங்கள் காரணமாகவே இந்தியா கிரிக்கெட் ஆட ஒப்புக் கொள்ளவில்லை என திட்டவட்டமாக கூறினார்.

பிசிசிஐ அருமையான வாதம்

பிசிசிஐ அருமையான வாதம்

vமேலும், பிசிசிஐ தாங்கள் ஆறு இருதரப்பு தொடர்களில் ஆடுவதாக அளித்தது முன்வரைவு கடிதம் மட்டுமே அன்றி புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்ல என துவக்கம் முதலே கூறி வந்ததும் இந்த வழக்கின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இந்தியா சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பிசிசிஐ கூறிய வருமான வழிமுறைக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினர். இவையெல்லாம் சேர்ந்து இந்தியாவுக்கு இந்த வழக்கில் வெற்றி தேடிக் கொடுத்துள்ளது.

Story first published: Tuesday, November 20, 2018, 19:24 [IST]
Other articles published on Nov 20, 2018
English summary
Pakistan Cricket Board lost the case against BCCI at ICC panel for compensation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X