For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேண்டவே வேண்டாம்.. அந்த 2 பேரை மட்டும் கேட்காதீங்க.. உதவிக்கு ஆள் கேட்டு ஏமாந்து போன பாக். கேப்டன்!

கராச்சி : பாகிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டன் பாபர் ஆசாம் இரண்டு மூத்த வீரர்களை அணியில் ஆட வைக்க விரும்புவதாக கூறி இருக்கிறார்.

அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் சிலர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து, அவர்களை தேர்வு செய்ய வேண்டாம் என கூறி உள்ளனர்.

இந்த சம்பவத்தால் புதிய கேப்டனின் சுதந்திரம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு - கேப்டன் இடையே ஆன உறவு பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.

சர்பராஸ் நீக்கம்

சர்பராஸ் நீக்கம்

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சுமார் இரண்டு ஆண்டுகளாக இருந்த சர்பராஸ் அஹ்மது உலகக்கோப்பை தொடரில் தோற்று விமர்சனத்தை சந்தித்தாலும், அதன் பின் நடந்த இலங்கை தொடரில் கிடைத்த தோல்விகளால் தன் கேப்டன் பதவியை இழந்தார்.

பாபர் ஆசாம் கேப்டன்

பாபர் ஆசாம் கேப்டன்

டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், டி20 அணிக்கு பாபர் ஆசாமும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். பாபர் ஆசாம் பாகிஸ்தான் அணியில் இருக்கும் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆஸ்திரேலிய டி20 தொடர்

ஆஸ்திரேலிய டி20 தொடர்

பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. சவாலான அந்த தொடருக்கான திட்டமிடலில் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவரான மிஸ்பா உல் ஹக் மற்றும் கேப்டன் பாபர் ஆசாம் ஈடுபட்டு இருந்தனர்.

இரண்டு மூத்த வீரர்கள்

இரண்டு மூத்த வீரர்கள்

பாபர் ஆசாம் கேப்டன்சியில் அதிக அனுபவம் இல்லாதவர் என்பதால் அணியில் மூத்த வீரர்கள் இருந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என கூறி இருக்கிறார். முகமது ஹபீஸ் மற்றும் ஷோயப் மாலிக்கை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என தன் விருப்பத்தை கூறி இருக்கிறார்.

உலகக்கோப்பைக்கு பின் நீக்கம்

உலகக்கோப்பைக்கு பின் நீக்கம்

முகமது ஹபீஸ், ஷோயப் மாலிக் இருவருமே உலகக்கோப்பை தொடரில் சரியாக ஆடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். மேலும், அவர்களது வீரர்கள் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு இனி அணியில் வாய்ப்பு இல்லை என்பதே நிலைமை.

பயிற்சியாளர் ஒப்புதல்

பயிற்சியாளர் ஒப்புதல்

நீக்கப்பட்ட மூத்த வீரர்களை கேப்டன் கேட்டாலும், அதற்கு ஒப்புக் கொண்டார் பயிற்சியாளர் - தேர்வுக் குழு தலைவர் மிஸ்பா உல் ஹக். மிஸ்பா அவர்கள் இருவரையும் அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிடம் பேசி இருக்கிறார்.

போர்டு மறுப்பு

போர்டு மறுப்பு

அப்போது பேசிய ஒரு அதிகாரி, முகமது ஹபீஸ் - ஷோயப் மாலிக், இருவரையும் தேர்வு செய்ய வேண்டாம் என பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் திட்டவட்டமாக கூறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல்

அரசியல்

கேப்டன் - பயிற்சியாளர் விருப்பத்திற்கு அதிகாரி ஒருவர் மறுப்பு கூறி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவும் அரசியலை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

கேப்டன் விளக்கம்

கேப்டன் விளக்கம்

இது பற்றி கேட்ட போது, "நான் அணி தேர்வில் என் கருத்தை மட்டுமே கூறினேன். சில மூத்த வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், இறுதி முடிவு தேர்வாளர்களுடையது தான் என்றார்.

எழும் கேள்வி

எழும் கேள்வி

கேப்டன் மூத்த வீரர்கள் உதவி தேவை என கூறும் போது அவருக்கு அதை அளிக்காமல் இருந்தால் அது ஆஸ்திரேலிய டி20 தொடரில் பாதிப்பை ஏற்படுத்தாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Monday, October 28, 2019, 9:35 [IST]
Other articles published on Oct 28, 2019
English summary
Pakistan Cricket Board official rejected a selection idea of captain Babar Azam. Eralier, captain asked to to include Shoaib Malik and Hafeez.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X