ஐபிஎல்லுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு.. ஐசிசியிடம் புகார் அளிக்கும் ரமிஸ் ராஜா.. வாங்க பேசலாம் – கங்குலி

துபாய்: ஐபிஎல் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து புதிய முட்டுக் கட்டையை போட திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது 10 அணிகள் கொண்ட பெருந்தொடராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை இரண்டரை மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

3 பவுலர்களுக்குமே வாய்ப்பில்லை.. அயர்லாந்து தொடரில் பிசிசிஐ காட்டும் பாரபட்சம்.. கடுப்பில் ரசிகர்கள்3 பவுலர்களுக்குமே வாய்ப்பில்லை.. அயர்லாந்து தொடரில் பிசிசிஐ காட்டும் பாரபட்சம்.. கடுப்பில் ரசிகர்கள்

இதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இரண்டரை மாதம் நடத்தாமல் இருக்கும் வகையில் அட்டவணையை அமைக்க கோரி ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இதன் மூலம், அனைத்து சர்வதேச வீரர்களும், ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஏதுவாக இருக்கும் என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் பிசிசிஐ வருமானம் அதிகளவு பெருகினாலும், மற்ற நாட்டின் கிரிக்கெட் சங்கங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்காக, ஐபிஎல் மூலம் பெரும் ஊதியத்தின் ஒரு பகுதியை அந்தந்த நாட்டு கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒரு தொகையை வீரர்கள் வழங்க உள்ளனர்.

பாகிஸ்தான் உள்குத்து

பாகிஸ்தான் உள்குத்து

ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் ஐபிஎல் போட்டிக்கு கொடச்சல் கொடுக்கும் வேலையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.இது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் ஐசிசி மீட்டிங்கில் , சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை ஐபிஎல் போட்டிக்காக சமரசம் செய்யக் கூடாது என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.

கங்குலி விடுத்த அழைப்பு

கங்குலி விடுத்த அழைப்பு

இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ரமிஸ் ராஜா, ஐபிஎல் போட்டிகளை காண, பிசிசிஐ தலைவர் கங்குலி 2 முறை தமக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் நான் சென்றால் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அது மன வருத்தத்தை தரும் என்பதால் நான் செல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

4 நாடுகள் தொடர்

4 நாடுகள் தொடர்

பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் வகையில் 4 அணிகள் பங்கேற்கும் டி20 தொடர் குறித்து தாம் வகுத்த திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை என்று குறிப்பிட்ட ரமிஸ் ராஜா, இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேச உள்ளதாகவும் அவர் கூறினார். 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மிட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistan cricket board plans to rise concern for IPL Window ஐபிஎல்லுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு.. ஐசிசியிடம் புகார் அளிக்கும் ரமிஸ் ராஜா.. வாங்க பேசலாம் – கங்குலி
Story first published: Saturday, June 25, 2022, 15:40 [IST]
Other articles published on Jun 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X