For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் கிரிக்கெட்டே அழிய போகிறது..ரமிஸ் ராஜா மீது பரபரப்பு குற்றச்சாட்டு..முன்னாள் வீரர் கருத்து

லாகூர்: ரமிஸ் ராஜா எடுக்கும் முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட்டே அழிய போகிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் முன்னாள் வீரர் தன்வீர் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார்.

Pakistan cricket is in great danger by ramiz raja decision feels ex cricketer

பாகிஸ்தான் அணிக்காக 5 டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி யில் தன்வீர் அகமது விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்வீர் அகமது செய்த ஒரு நல்ல காரியத்தாவது சொல்ல முடியுமா? பாகிஸ்தான் அணி தேர்வு, பிசிபியில் நடக்கும் தேர்வுகள் ஏதும் மெரிட் படி நடைபெற வில்லை.

ரமிஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட போது , எதாவது நல்லது நடக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எந்த ஒரு நல்ல காரியமும் நடக்கவில்லை. இந்த பதவியில் இவருக்கு முன்னால் இருந்தவர்கள் எப்படி செயல்பட்டார்களோ, அதே போல் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு செயல்படாமல், நேரத்தை ஓட்டிவிட்டார்.

 ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங்.. ஜடேஜா- ஸ்ரேயாஸ்க்கு வந்த வாய்ப்பு.. பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்யம் ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங்.. ஜடேஜா- ஸ்ரேயாஸ்க்கு வந்த வாய்ப்பு.. பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்யம்

ஜூனியர் பிஎஸ்எல் தொடரை நடத்தப் போவதாக ரமிஸ் ராஜா அறிவித்துள்ளார். இது போன்ற தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே அழித்துவிடும். ஆனால் 3 நாள் டெஸ்ட் போட்டிகள் இன்னும் நடைபெறவில்லை. இப்படி டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் தராமல் டி20 போட்டிகளை நடத்துவது தவறு.

இதன் மூலம் இளைஞ்ர்கள் 13 வயதில் இருந்தே பணத்திற்கு பின்னால் ஓட தொடங்கிவிடுவார்கள். டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதன் மூலம் தான் கிரிக்கெட் கற்று கொள்ள முடியும். தற்போது ஜூனியர் பிஎஸ்எல் தொடருக்காக வீரர்கள் சிக்சர் அடிப்பதில் தான் கவனம் செலுத்துவார்கள்.

Story first published: Sunday, June 26, 2022, 20:03 [IST]
Other articles published on Jun 26, 2022
English summary
Pakistan cricket is in great danger by ramiz raja decision feels ex cricketer பாகிஸ்தான் கிரிக்கெட்டே அழிய போகிறது..ரமிஸ் ராஜா மீது பரபரப்பு குற்றச்சாட்டு..முன்னாள் வீரர் கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X