For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி.. நீங்க எங்கேயோ போயிட்டீங்க.. பாக். வீரரை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள்!

Recommended Video

Ahmed Shehzad cheating catch | பாக். வீரரை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹ்மத் சேஷாத் செய்த காரியத்தை பார்த்து கிரிக்கெட் உலகம் சிரிப்பாய் சிரித்து வருகிறது.

பாகிஸ்தான் உள்ளூர் தொடரில் அஹ்மத் சேஷாத் பெடரல் எரியாஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

இவங்க 2 பேருமே சரியில்லை.. சென்னை அணிக்கு தலைவலியாக மாறி வரும் அம்பதி ராயுடு - வாட்சன்! இவங்க 2 பேருமே சரியில்லை.. சென்னை அணிக்கு தலைவலியாக மாறி வரும் அம்பதி ராயுடு - வாட்சன்!

எந்த போட்டியில்..

எந்த போட்டியில்..

பெடரல் அணி கைபர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்து 269 ரன்கள் குவித்தது பெடரல் அணி. அடுத்து ஆடிய கைபர் அணி எளிதாக அந்த 270 ரன்கள் இலக்கை சேஸ் செய்தது.

கேட்ச்சை விட்டு விட்டார்

கைபர் அணியின் பேட்டிங்கின் போது குஷ்தில் ஷா கொடுத்த கேட்ச்சை பிடிக்க, பவுண்டரி அருகே நின்று இருந்த அஹ்மத் சேஷாத் முயற்சித்தார். ஆனால், கேட்ச்சை விட்டு விட்டார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அவர் கேட்ச்சை விட்டு விட்டார் என்பது எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தது. ஆனால், அஹ்மத் "அது கேட்ச் தான்" என ரிவ்யூ கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கீழே விட்ட கேட்ச்சுக்கு ரிவ்யூவா என அனைவரும் குழம்பினர்.

இலங்கை போட்டியில்..

இலங்கை போட்டியில்..

"என்னடா இது ஏமாற்று வேலையா இருக்கே" என நினைத்தால், அஹ்மத் ஏற்கனவே, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இதே காரியத்தை செய்துள்ளார். அதாவது, சர்வதேசப் போட்டியில் கேட்ச்சை விட்டு விட்டு, பின்னர் பந்தை கையில் வைத்துக் கொண்டு அவுட் கேட்டுள்ளார்.

ஆச்சரியம் இல்லை

ஆச்சரியம் இல்லை

அவர் உள்ளூர் போட்டியில் இப்படி செய்வது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என பலரும் சமூக வலைதளத்தில் கூறி வருகின்றனர். முன்பு அஹ்மத் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால், ஊக்க மருந்து விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி நான்கு மாதம் தடை செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கேயோ போயிட்டீங்க

எங்கேயோ போயிட்டீங்க

கீழே விட்ட கேட்ச்சுக்கு இத்தனை டெக்னாலஜி, கேமரா இருக்கும் காலத்திலும் ஒருவர் ரிவ்யூ கேட்கிறார் என்றால்.. அஹ்மத்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க!

Story first published: Thursday, April 4, 2019, 15:38 [IST]
Other articles published on Apr 4, 2019
English summary
Pakistan cricketer Ahmed Shehzad go for DRS after dropping catch
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X