For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரராக ஒரு காலத்தில் விளங்கியவர் உமர் அக்மல். கம்ரான் அக்மலின் தம்பியான உம்ரான் அக்மல் பாகிஸ்தானுக்கு 16 டெஸ்ட், 121 ஒரு நாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

தற்போது பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருக்கிறாரோ அதேபோன்ற ஒரு உச்சத்தை தொட்ட உமர் அகமல் ஸ்பாட் பிக்சிங் செய்ய சொல்லி புக்கிகள் தன்னை அணுகியது குறித்து புகார் அளிக்காத குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் அணியில் இருந்து உமர் மாலிக் தடை விதிக்கப்பட்டார்.

எனினும் தமது செயலுக்கு அவர் மன்னிப்பு கூறியதையடுத்து தடை நீக்கப்பட்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

வீசி எறியப்பட்ட ஜெர்ஸி.. அம்பயரே கோபத்தில் கொந்தளிப்பு.. பாகிஸ்தான் போட்டியில் பரபர சம்பவம்- விவரம் வீசி எறியப்பட்ட ஜெர்ஸி.. அம்பயரே கோபத்தில் கொந்தளிப்பு.. பாகிஸ்தான் போட்டியில் பரபர சம்பவம்- விவரம்

ரமீஸ் ராஜா பேச்சு

ரமீஸ் ராஜா பேச்சு

ஆனால் இதுவரை ஒரு முறை கூட மீண்டும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு தரவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்து விட்டதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

 வெட்கப்படுகிறேன்

வெட்கப்படுகிறேன்

தற்போது இதற்கு பதில் அளித்துள்ள உமர் அகமல், ரமீஸ் ராஜா இவ்வாறு கூறியதற்கு நான் உண்மையிலே வெட்கப்படுகிறேன். பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்து இருக்கிறேன். ஆனால் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தப்படும் விதம் சரியல்ல .இதற்கு தகுதியான நபர் நான் கிடையாது. வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.

பிசிசிஐயை பாருங்கள்

பிசிசிஐயை பாருங்கள்

உதாரணத்துக்கு விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவருக்கு தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலம் தற்போது அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

உமர் அக்மல் வேதனை

உமர் அக்மல் வேதனை

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்படி செய்யவில்லை ரமீஷ் ராஜா என் பெயரை குறிப்பிடாமல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தால் கூட என் மனது அமைதியாக இருக்கும் என்று உமர் அகமல் வேதனை தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்த நிலையில், உமர் அக்மலும் மீண்டும் அணிக்குள் வர போராடுகிறார்.

Story first published: Thursday, February 2, 2023, 16:43 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
Pakistan cricketer umar akmal slams PCB for treating their players unethically பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X