For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட் இனி அவ்வளவு தான்...!! கங்குலி மீது பாக்.முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு..!!

லாகூர்: விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதால் உருவான அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. இதில் எந்த அரசியலும் இல்லை என்று சொன்னாலும் சின்ன குழந்தைகள் கூட நம்பாது

நல்ல விஷயங்களுக்கு முடிவு வருவது போல் தனது கேப்டன்ஷிப் பயணத்திற்கும் முடிவு வந்துவிட்டதாக கோலி கூலாக கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.

“6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!! “6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!!

ஆனால் விராட் கோலியின் ராஜினாமா அவரது தனிப்பட்ட முடிவு என்றும், இதனை பி.சி.சி.ஐ. மதிப்பதாக கங்குலி தெரிவித்தார்.

கங்குலியுடன் மோதல்

கங்குலியுடன் மோதல்

விராட் கோலி முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப், கங்குலியுடன் விராட் கோலி மோதியதால் தான், அவர் பதவி விலக நேரிட்டது என்று தெரிவித்துள்ளார். கங்குலி, விராட் கோலியை புகழ்ந்தாலும், விராட் கோலி வேறு காரணங்களை சொன்னாலும் அதில் எதுவும் உண்மை அல்ல. இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்கள் மோதி கொண்டனர். கிரிக்கெட் வாரியத்துடன் மோதியதால் தான் விராட் கோலி பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

குறிவைக்கப்பட்ட கோலி

குறிவைக்கப்பட்ட கோலி

விராட் கோலியை குறிவைத்து செயல்பட்டதன் மூலம் இந்திய கிரிக்கெட் பாதிக்கப்பட்டு விட்டதாக லதிஃப் கூறினார்,டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டியிலிருந்து விராட் கோலி ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது விராட் கோலிக்கு மறைமுக அழுத்தம் ஏற்படுத்தியது. இதனால் வெல்ல வேண்டிய தென்னாப்பிரிக்க தொடரை இந்தியா தோற்றுவிட்டது.

பி.சி.சி.ஐ. அரசியல்

பி.சி.சி.ஐ. அரசியல்

விராட் கோலி உணர்ச்சிவசப்பட கூடியவர். இதனால் அவரை எப்படி , எப்போது கோவப்படுத்த வேண்டும் என்று இங்கு சிலருக்கு நன்கு தெரிந்துள்ளது. அவர் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு எப்படி டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். ஆனால் நீங்கள் ஒருநாள் போட்டியிலிருந்தும் நீக்கிவிட்டீர்கள், இப்போது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவரே சென்றுவிட்டார்

Recommended Video

100th Test Match-க்கு BCCI கொடுத்த கவுரவம்.. நிராகரித்த Virat Kohli
சிதைத்துவிட்டனர்

சிதைத்துவிட்டனர்

விராட் கோலியை நீங்கள் நிலைக்குலைய செய்ததன் மூலம் இந்திய கிரிக்கெட்டையே நிலையற்ற தன்மைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் லதீஃப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் விராட் கோலிக்கு இது போன்ற மன அழுத்தங்கள் தொடர்ந்து தரப்பட்டால், அவர் கிரிக்கெட்டை விட்டு சென்று விடுவாரோ என்று அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, January 18, 2022, 16:56 [IST]
Other articles published on Jan 18, 2022
English summary
Pakistan EX Captain Rashid Lathif alleges Ganguly is the Reason for kohli decision இந்திய கிரிக்கெட் இனி அவ்வளவு தான்...!! கங்குலி மீது பாக்.முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X