For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் மோசமான பேட்டிங்..ரவி சாஸ்த்ரி தான் காரணம்..முன்னாள் பாகிஸ்தான் வீரர் பரபரப்பு புகார்

கராச்சி: விராட் கோலியின் மோசமான பேட்டிங்கிற்கு காரணமே ரவி சாஸ்த்ரி பயிற்சியாளராக இருந்தது தான் காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லதிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி கடைசியாக சதம் விளாசி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. விராட் கோலியின் இந்த ஃபார்ம்க்கு காரணம் பல காரணங்கள் கூறப்பட்டது.

இதற்கு ஒரு படி மேல் போய், மனைவி அனுஷ்கா சர்மா தான் மோசமான ஃபார்ம்க்கு காரணம் என்ற குற்றச்சாட்டுல்லாம் முன் வைக்கப்பட்டது.

விராட் கோலி படைக்கப்போகும் பெரும் சாதனை.. கவாஸ்கருக்கு பின் 3வது வீரர்.. டிராவிட் கூட செய்ததில்லை!! விராட் கோலி படைக்கப்போகும் பெரும் சாதனை.. கவாஸ்கருக்கு பின் 3வது வீரர்.. டிராவிட் கூட செய்ததில்லை!!

மாலத்தீவு பயணம்

மாலத்தீவு பயணம்

இந்த நிலையில், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல், விராட் கோலி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோல்டன் டக் ஆனார். இதனால் விராட் கோலியை கிரிக்கெட்டிலிருந்து சின்ன பிரேக் எடுக்க சொல்லி ரவி சாஸ்த்ரி வலியுறுத்திய நிலையில், அவர் ஐபிஎல் தொடர் முடிந்ததும் மாலத்தீவு சென்றார். தற்போது இங்கிலாந்து தொடருக்காக விராட் கோலி தயாராகி வருகிறார்.

விராட் கோலி செயல்

விராட் கோலி செயல்

தற்போது அப்துல் லத்திஃப் குற்றச்சாட்டு குறித்து பார்க்க வேண்டும் என்றால், அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள ஒரு குட்டி கதை நமக்கு தெரிய வேண்டும். 2017ஆம் ஆண்டு கும்ப்ளே தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் விராட் கோலி தான் பிசிசிஐக்கு கடிதம் ஒன்றை எழுதி கும்ப்ளேவை வெளியே அனுப்பி ரவி சாஸ்த்ரியை அந்த பொறுப்புக்கு கொண்டு வந்தார்.

மெத்தன போக்கு

மெத்தன போக்கு

தற்போது அப்துல் லத்திஃப் இதை தான் குற்றம்சாட்டி இருக்கிறார். விராட் கோலியின் பேட்டிங் சிக்கலுக்கு ரவி சாஸ்த்ரி தான் காரணம். கும்ப்ளே வீரர்களை தீவிரமாக பயிற்சி எடுக்க சொல்லி அறிவுறுத்துவார். ஆனால் ரவி சாஸ்த்ரி அப்படி அல்ல. இதனால் ரவி சாஸ்த்ரி பொறுப்புக்கு வந்த பிறகு விராட் கோலிக்கு மெத்தன போக்கு ஏற்பட்டு விட்டது.

கோலிக்கே பாதிப்பு

கோலிக்கே பாதிப்பு

ரவி சாஸ்த்ரி மட்டும் பயிற்சியாளராகவில்லை என்றால் விராட் கோலிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்காது. ரவி சாஸ்த்ரி கிரிக்கெட் வர்ணனையில் இருக்கும் போதே தேவையில்லாமல் களத்துக்கு வந்து விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் தலையிடுவார். ரவி சாஸ்த்ரியை பயிற்சியாக கொண்டு வந்த கோலியின் முடிவு அவருக்கே பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக லத்திஃப் சாடினார்.

Story first published: Wednesday, June 22, 2022, 19:56 [IST]
Other articles published on Jun 22, 2022
English summary
Pakistan EX Captain Rashid Latif slams Ravi shastri for virat kohli form dip விராட் கோலியின் மோசமான பேட்டிங்..ரவி சாஸ்த்ரி தான் காரணம்..முன்னாள் பாகிஸ்தான் வீரர் பரபரப்பு புகார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X