கோலியை விட பாபர் அசாம், ஜோ ரூட் தான் பெஸ்ட்.. அந்த குறை விராட்க்கு போகாது.. பாக். வீரர் சீண்டல்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இருக்கும் பிரச்சனை தற்போது தீராது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்யூப் ஜாவித் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசவில்லை.
இந்நிலையில் அவருடைய பேட்டிங் ஃபார்மும் தற்போது முன்பு போல் இல்லை.

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டும் சர்வை சந்தித்துள்ளது இதன் காரணமாக அவருடைய வாழ்க்கையிலே முதல் முறையாக டி20 தரவரிசை பட்டியலில் 20 இடங்களை தாண்டி இருக்கிறார் .

“ஒரு ஹீரோவை இப்படியா நடத்துவது.. ” பிசிசிஐ-ன் நிதானமில்லாத முடிவுகள்.. சாபா கரீம் கடும் விளாசல்! “ஒரு ஹீரோவை இப்படியா நடத்துவது.. ” பிசிசிஐ-ன் நிதானமில்லாத முடிவுகள்.. சாபா கரீம் கடும் விளாசல்!

மீண்டும் கோலி

மீண்டும் கோலி

இந்த நிலையில் விராட் கோலிக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார். இதற்காக மும்பையில் தற்போது தீவிர பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்டு இருக்கிறார்.விராட் கோலி அணிக்கு வந்தால் தீபக் ஹூடாவின் இடம் காலியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் அக்யூப் ஜாவித் விராட் கோலியை சீண்டிருக்கிறார்.

2 வகை வீரர்கள்

2 வகை வீரர்கள்

அவர் அளித்துள்ள பேட்டியில் தற்போது உள்ள சிறந்த வீரர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று சில வீரர்களுக்கு பேட்டிங்கில் சில குறைபாடுகள் இருக்கும். அதிலிருந்து அவர்கள் உடனடியாக மீண்டு வருவார்கள். மற்ற வகையினர் அந்த பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து பார்ம் அவுட் ஆகி இருப்பார்கள். இதில் பாபர் அசாம், ஜோ ரூட்,கேன் வில்லியம்சன் போன்ற வீரர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள்.

விராட் கோலியின் குறை

விராட் கோலியின் குறை

அவர்கள் ஃபார்மில் இல்லை என்றாலும் உடனடியாக ரன் குவித்து விடுவார்கள். ஆனால் விராட் கோலி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.அவருக்கு எப்போதுமே ஆஃப் ஸ்டம்ப் அருகே பந்து சென்றால் அடிக்க தெரியாது. இந்த குறை உள்ளவரை விராட் கோலி ரன் அடிக்க மாட்டார்.இந்தக் குறையை போக்க வேண்டும் என்றால் ஆப்ஸ் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை விளையாடாமல் இருப்பது தான் ஒரே வழி.ஆனால் பாபரசம் கீழ் வில்லியம்சன் உள்ளிட்டவர்களின் பேட்டிங் குறையை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

ஆறுதல்

ஆறுதல்

விராட் கோலியை பொறுத்தவரை அவர் களத்தில் நீண்ட நேரம் பேட செய்தால் மட்டுமே அவரால் பார்முக்கு திரும்ப முடியும். தற்போது ஆசிய கோப்பை டி20 போட்டியில் விராட் கோலி இதே போன்ற சூழ்நிலையில் சிக்கினால், இந்தியா ஒருவேளை தோற்றுப் போனால் , விராட் கோலி ஏன் அணியில் எடுத்தீர்கள் என்ற விமர்சனம் எழும். ஆனால் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் தான் போட்டி நடைபெறுகிறது. இது விராட் கோலிக்கு ஆறுதலை அளிக்கலாம். மற்றபடி கொஞ்சம் கஷ்டம் தான் என்று ஆக்யூப் ஜாவித் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistan EX Cricketer Aaqib Javed feels Babar azam is better player than virat kohli கோலியை விட பாபர் அசாம், ஜோ ரூட் தான் பெஸ்ட்.. அந்த குறை விராட்க்கு போகாது.. பாக். வீரர் சீண்டல்
Story first published: Saturday, August 13, 2022, 19:45 [IST]
Other articles published on Aug 13, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X