நோ சான்ஸ் ! சூர்யகுமார் இடத்தை மாற்ற கூடாது.. யார் வந்தாலும் பரவாயில்ல.. அடித்து கூறும் பாக். வீரர்

லாகூர் : சூரியகுமார் இடத்தை இந்திய அணியில் இனி மாற்றக்கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா வலியுறுத்தியுள்ளார்.

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் வரும் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

ஆசிய கண்டத்தில் முன்னணி அணிகள் மோதுவதால் ஆசிய கோப்பை தொடர்க்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்த நிலையில் இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் திரும்பி உள்ளனர். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவலில் பல மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வீரராக சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அந்தத் தொடரில் அவர் 24,11, 76, 24 ஆகிய ரன்களை நான்கு இன்னிங்ஸில் விளாசினார்.

டேனிஷ் கனேரியா கோரிக்கை

டேனிஷ் கனேரியா கோரிக்கை

இதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனிரியா அளித்துள்ள பேட்டியில், ரோகித் சர்மாவுடன் சக தொடக்க வீரராக சூரியகுமார் யாதவ் தான் களமிறங்க வேண்டும்.தொடக்க வீரராக சூரியகுமார் யாதவ் சிறப்பாகவும் தொடர்ந்து ரன் சேர்க்கும் வகையிலும் விளையாடினார். கே எல் ராகுல் அணிக்குத் திரும்பி வந்தாலும் சூரியகுமார் யாதவை தொடக்க வீரர் என்ற இடத்தில் இருந்து மாற்றக்கூடாது.

கே எல் ராகுல் இடம்

கே எல் ராகுல் இடம்

அதற்கு பதில் கே எல் ராகுலை நடு வரிசையில் களம் இருக்கலாம். கே எல் ராகுல் எந்த வரிசையில் வேண்டுமானாலும் விளையாடகூடியவர். அந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது கேஎல் ராகுல் அனைத்து சூழ்நிலையும் நன்றாக விளையாட கூடியவர். இதனால் தொடக்க வீரராக ரோஹித் மற்றும் சூரியகுமார் யாரோ களமிறங்க வேண்டும். கே.எல் ராகுல் நடு வரிசையில் தொடர வேண்டும் என டேனிஷ் கனரியா வலியுறுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வே தொடர்

ஜிம்பாப்வே தொடர்

தற்போது உள்ள ஜிம்பாப்வே தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.பொதுவாக ஒரு நாள் போட்டியில் கேஎல் ராகுல் நடுவரசையில் இறங்குவார்.ஆனால் இம்முறை அவர் தொடக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஷிகர் தவான், சுப்மான் கில், ராகுல் திருபாதி, இஷான் கிஷன் ருத்துராஜ் என பல்வேறு வீரர்கள் தொடக்க இடத்தில் விளையாட கூடியவர்கள். இதனால் ஜிம்பாப்வே தொடரில் கே.எல் ராகுல் என்ன செய்வார் என எதிர்பார்ப்பு இருந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistan EX Cricketer Danish Kaneria urges suryakumar yadav to play in opener நோ சான்ஸ் ! சூர்யகுமார் இடத்தை மாற்ற கூடாது.. யார் வந்தாலும் பரவாயில்ல.. அடித்து கூறும் பாக். வீரர்
Story first published: Friday, August 12, 2022, 18:31 [IST]
Other articles published on Aug 12, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X