For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு தோல்வி.. இந்தியா வைத்த செக்... அரையிறுதி வாய்ப்பு நெருக்கடியில் பாக்.

எட்ஜ்பாஸ்டன்: இந்திய அணியின் தோல்வியால், அரையிறுதி வாய்ப்பை பெறுவதில் பாகிஸ்தானுக்கு அதிகப்படியான நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

அதிரடி மன்னன் ஜானி பெயர்ஸ்டோவின் அட்டகாச சதம், பீல்டிங், அசத்தல் பவுலிங், துல்லியமான திட்டமிடல் ஆகியவற்றால் இந்தியாவை தோற்கடித்திருக்கிறது இங்கிலாந்து. அதன் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பினையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

நேற்றைய போட்டியை இந்திய ரசிகர்களை விட பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் எதிர்பார்த்திருந்தன. எப்படியாவது இங்கிலாந்தை வீழ்த்தி விடுங்கள் என பாகிஸ்தான் ரசிகர்கள், அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் இந்தியாவுக்கு நேசக்கரங்களை நீட்டினர்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் திரண்ட பாகிஸ்தான் ரசிகர்களும், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து, உற்சாகப்படுத்தினர். ஆனால்... இந்தியா தோல்விடைந்தது. இந்த போட்டியில் இந்தியா வேண்டுமென்றே தோற்றது, அதற்கு தோனியும், கேதர் ஜாதவும் தான் காரணம் என்று நெட்டிசன்கள் பகடை உருட்டி வருகின்றனர்.

27 ஆண்டுகால வரலாறு

27 ஆண்டுகால வரலாறு

இந்த போட்டித்தொடரில் தோல்வியே சந்திக்காமல் வந்த இந்தியஅணி முதல் தோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் 1992க்கு பிறகு இந்திய அணியை உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி.

4வது இடத்துக்கு முன்னேற்றம்

4வது இடத்துக்கு முன்னேற்றம்

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. (இந்த போட்டிக்கு முன்பு வரை 4வது இடத்தில் இருந்தது பாகிஸ்தான்). இந்தியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது.

கட்டாய வெற்றி

கட்டாய வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்துக்கு இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கிடைத்த வெற்றி, மனோபலம் ஆகிய வற்றால் அந்த அணியையும் வீழ்த்தி உலக கோப்பை ரேசில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

4வது இடத்துக்கு போட்டி

4வது இடத்துக்கு போட்டி

அரையிறுதிக்கான தகுதிச்சுற்று அணிகளில் முதல் இரண்டு இடங்களை தவிர, அடுத்த 2 இடங்களை கைப்பற்றுவது தான் அதிக போட்டியை உருவாக்கி இருக்கிறது. அதிலும் இன்னும் சொல்லப்போனால், 4வது இடத்துக்கு தான் ஏக போட்டி.

நெருக்கடியில் பாக்.

நெருக்கடியில் பாக்.

தற்போது 4வது இடத்துக்கு காத்திருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தியாவின் தோல்வி அதிக நெருக்கடியை கொண்டு வந்து தந்திருக்கிறது. ஏற்கனவே, அந்த அணியின் மீது ஏக காண்டில் இருக்கின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள். அதன்பிறகு பெற்ற சில தொடர் வெற்றிகள் ரசிகர்களின் அந்த மனநிலையை சற்றே மாற்றி இருக்கின்றன.

ரேசில் வங்கதேசம்

ரேசில் வங்கதேசம்

தற்போது பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்குள் நுழைவது ஒன்றே குறிக்கோள். இந்த போட்டியில் வங்கதேசமும் இருக்கிறது. 6வது இடத்தில் அந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகள் பாக்கி இருக்கின்றன. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் 11 புள்ளிகள் வரும் (ரன் ரேட் ரொம்ப முக்கியம்).

ஒரு போட்டி பாக்கி

ஒரு போட்டி பாக்கி

பாகிஸ்தான் தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருந்தாலும் அந்த அணிக்கு ஒரு ஆட்டம் தான் பாக்கி இருக்கிறது. அந்த அணி 4 வெற்றி, 9 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

சிக்கல் தரும் போட்டி

சிக்கல் தரும் போட்டி

அதிலும் ஜெயித்துவிட்டால், 11 புள்ளிகள் பெற்றுவிடும். அந்த ஆட்டம் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டம். உலக கோப்பையில் பல முறை ஆச்சரிய வெற்றிகளை பெற்றிருக்கும் அணி வங்க தேசம். ஆக மொத்தத்தில் பாகிஸ்தான் எதிர்பார்த்த இந்திய வெற்றி கிடைக்காத நிலையில், அரையிறுதிக்கான வாய்ப்பில் அந்த அணிக்கு அதிக சிக்கல் எழுந்திருக்கிறது .

Story first published: Monday, July 1, 2019, 12:15 [IST]
Other articles published on Jul 1, 2019
English summary
Pakistan has a tremendous pressure to get seat in semi final, after india lose against England,
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X