For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் அணியின் "மென்டார்" ஆகிறார் ரிச்சர்ட்ஸ்!

கராச்சி: விவியன் ரிச்சர்ட்ஸ் சீக்கிரமே புது அவதாரம் எடுக்கப் போவது உறுதியாகி விட்டது. அவரிடம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மென்டாராக செயல்படுவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாகப் பேசி வருகிறதாம். எல்லாம் சரியாக நடந்தால் ஆசியா கோப்பை மற்றும் டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மென்டார் ஆக ரிச்சர்ட்ஸ் செயல்படுவார்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன் என்று சமீபத்தில்தான் கூறியிருந்தார் ரிச்சர்ட்ஸ். அதேசமயம், தற்போதைய பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதால் எதிர்காலத்தில் இது குறித்துப் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இருப்பினும் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரிச்சர்ட்ஸை, பாகிஸ்தான் அணியின் மென்டார் ஆக நியமிக்க முடிவு செய்து அதுதொடர்பாக அவருடன் பேசி வருகிறது.

ஆசியா கோப்பை - உலகக் கோப்பை

ஆசியா கோப்பை - உலகக் கோப்பை

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஆசியாக் கோப்பை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள டுவென்டி 20 உலகக் கோப்பை ஆகிய இரு தொடர்களுக்கும் ரிச்சர்ட்ஸை மென்டார் ஆக நியமிப்பது குறித்து ரிச்சர்ஸுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேசி வருகிறதாம்.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ்

குவெட்டா கிளாடியேட்டர்ஸ்

தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் மென்டார் ஆக ரிச்சர்ட்ஸ் செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் அவருடன் பேசி வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறப்படுகிறது.

குறுக்கிடும் மீடியா கமிட்மென்ட்

குறுக்கிடும் மீடியா கமிட்மென்ட்

இருப்பினும் சில மீடியாக்களுடன் ரிச்சர்ட்ஸ் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளார். அதை முறிக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மென்டார் பொறுப்புக்கு அவர் வர முடியாது. இது ஒன்றுதான் தடையாக உள்ளதாம்.

இதுவரை சம்மதிக்கவில்லை

இதுவரை சம்மதிக்கவில்லை

இந்தக் காரணத்தாலும், பிற காரணத்தாலும் இதுவரை ரிச்சர்ட்ஸ் தனது முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காமல் உள்ளாராம். இருப்பினும் பேச்சுவார்த்தை தொடர்கிறதாம்.

பந்து வீச்சுப் பயிற்சியாளராகும் அஸார் மெஹமூத்

பந்து வீச்சுப் பயிற்சியாளராகும் அஸார் மெஹமூத்

இதற்கிடையே, பாகிஸ்தன் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் ஆல்ரவுண்டர் அஸார் மெஹமூதுவை நியமிப்பது தொடர்பாக பாகிஸ்தான் கிரி்க்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறதாம். தற்போது இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் வீரராக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளிலும் இவர் ஆடியுள்ளார்.

Story first published: Friday, February 19, 2016, 14:31 [IST]
Other articles published on Feb 19, 2016
English summary
The Pakistan Cricket Board (PCB) is holding negotiations with legendary West Indian batsman Sir Vivian Richards to appoint him as mentor of the national team for the forthcoming Asia Cup and ICC World T20 in Bangladesh and India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X