For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அங்க வீசு..!! இல்ல.. இங்க வீசு..! குழம்பி தொலைத்து ரோகித் ரன் அவுட்டை மிஸ் செய்த பாக்..! #INDvsPAK

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | பாக். பவுலர்களை பந்தாடி ரோஹித் அடித்த சதம்

மான்செஸ்டர்: ரோகித் சர்மாவை அவுட்டாக்கும் அருமையான சான்சை கோட்டை விட்டு ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கி கட்டியிருக்கிறது பாகிஸ்தான்.

இதோ.... அதோ என்ற மழை மவுனமாக ஒதுங்கிவிட... உலகமே எதிர்பார்த்த இந்தியா, பாக் மேட்ச் எவ்வித சேதாரமும் இல்லாமல் தொடங்கி இருக்கிறது. டாசில் வென்ற பாக். முதலில் பீல்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.

எந்த அடிப்படையில் பாக். கேப்டன் டாசில் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தார் என்று தெரிய வில்லை. அது எந்த முடிவாக இருந்தாலும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்று சொல்லலாம்.

அடடே.. இங்க பாருங்க.. மான்செஸ்டர் மைதானத்திற்கு யாரு போயிருக்கான்னு! அடடே.. இங்க பாருங்க.. மான்செஸ்டர் மைதானத்திற்கு யாரு போயிருக்கான்னு!

 அருமையான தொடக்கம்

அருமையான தொடக்கம்

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ராகுலும், ரோகித்தும் அபார தொடக்கம் அமைத்திருக்கின்றனர். தொடக்கத்தில் பவுலிங்கை எதிர்கொள்ள ராகுல் தடுமாறினார். லேசாக தடுமாறிய ரோகித், பின்னர் மட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கிறார். விளைவு அதிரடி சதம்... லேசாக ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது பாக் பவுலிங்.

 அல்வா வாய்ப்பு

அல்வா வாய்ப்பு

பவுலிங் சொதப்பியது போலவே.. ரோகித்தை ரன் அவுட்டாக்கும் அல்வா வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறது பாகிஸ்தான். 10வது ஓவரில் அந்த சொதப்பல் அரங்கேறி இருக்கிறது. முதல் பந்தை வீசிகிறார் ரியாஸ். மறுமுனையில் பந்தை எதிர்கொண்ட ராகுல் அடிக்கிறார்.

2வது ரன்னுக்கு ரோகித்

இருவரும் ஒரு ரன் ஓடி எடுக்கின்றனர். 2வது ரன்னுக்காக எதை பற்றியும் யோசிக்காமல் ஓடி வருகிறார் ரோகித். ஒரு கட்டத்தில் ஸ்டார்டிங் கொடுத்த ராகுல் பின்னர் மறுக்க, ரோகித் கிட்டத்தட்ட ஆடுகளத்தின் முக்கால் பங்கு தூரத்தைக் கடந்திருந்தார்.

 தப்பி பிழைத்த ரோகித்

தப்பி பிழைத்த ரோகித்

ஆனால், பந்தை எடுத்த பீல்டரோ, கீப்பர் எண்டுக்கு வீசாமல், பவுலர் இருக்கும் திசையை நோக்கி வீசினார். அங்கிருந்த பீல்டர் அதையும் தவறவிட, அதற்குள் கிரீஸை அடைந்து தப்பிப் பிழைத்தார் ரோகித்! மிஸ்சானது அற்புதமான ரன் அவுட். அந்த ரன் அவுட் கோட்டை விட்டதன் விளைவு 50 ரன்களை கடந்தார் ரோகித். பாக்.கின் இந்த சொதப்பல் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக மாறக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.

Story first published: Sunday, June 16, 2019, 16:52 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
Pakistan misses rohit sharma run out chance.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X