For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த ரன் மெஷினாகி வருகிறார்..... பேட்டிங்கில் மற்றொரு சாதனை..... மிரட்டுகிறார் பகர் ஜமான்!

Recommended Video

புதிய சாதனைகளை படைத்து வருகிறார் பகர் ஜமான்!- வீடியோ

டெல்லி: பாகிஸ்தானின் இளம் பேட்ஸ்மேன் பகர் ஜமான், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதிய சாதனையை படைத்து வருகிறார். அடுத்த ரன் மெஷினாகி, மிரட்டல் ஆட்டத்தால் புதிய புதிய சாதனைகளை படைப்பதுடன், பல சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரை 5-0 என அபாரமாக வென்றது பாகிஸ்தான்.

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி பல வெற்றிகளை குவித்ததுடன், பல சாதனைகளையும் படைத்து வருகிறது.

அந்த வகையில், ஜிம்பாப்வேக்கு எதிரான 4வது ஆட்டத்தின்போது, பகர் ஜமான் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இமாம் உல் ஹக்குடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்களை குவித்த சாதனையையும் புரிந்தார்.

ஜமான் மிரட்டல்

ஜமான் மிரட்டல்

இந்த நிலையில் நேற்று நடந்த ஐந்தாவது ஒருதினப் போட்டியிலும் பாகிஸ்தான் வென்றது. இந்த ஆட்டத்தில், பகர் ஜமான் 85 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருதினப் போட்டியில் இரண்டு முறை விக்கெட் இழப்பதற்குள் அதிக ரன்கள் குவித்த சாதனையை அவர் படைத்தார்.

அவுட்டாகாமல் அதிக ரன்கள்

அவுட்டாகாமல் அதிக ரன்கள்

ஜிம்பாப்வேக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 117, 43, 210 ரன்களை எடுத்ததுடன், நேற்று 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்படி கடைசியாக அவர் அவுட்டான பிறகு நேற்று நடந்த ஆட்டத்தில் அவுட்டான இடைப்பட்ட காலத்தில், 455 ரன்கள் குவித்தார். பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது யூசப் 2002ல் இவ்வாறு 405 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

அதிகபட்ச ஸ்கோர்

அதிகபட்ச ஸ்கோர்

இதனிடையில் 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஜமான் புரிந்துள்ளார். அவர் 515 ரன்கள் எடுத்துள்ளார். ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசாகட்சா 467 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

ஆயிரம் ரன்கள்

ஆயிரம் ரன்கள்

ஒருதினப் போட்டிகளில் மிக விரைவாக ஆயிரம் ரன்கள் கடந்த விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் நான்கு பேட்ஸ்மேன்களின் சாதனையை ஜமான் முறியடித்தார். 17வது போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார் ஜமான். ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், டிராட், டிகாக், பாபர் ஆசாம் ஆகிய ஐவரும் 21 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்தனர்.

Story first published: Monday, July 23, 2018, 14:28 [IST]
Other articles published on Jul 23, 2018
English summary
Pakistan player fakhar zaman created new records in the odi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X