For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தடுத்து 2 பந்துகளில் அல்வா டைப் கேட்சுகள்.. அசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்

Recommended Video

WORLD CUP 2019: SA VS PAK | 2 கேட்சுகளை கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்- வீடியோ

லார்ட்ஸ்: பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில், அந்த அணியினர் கேட்சுகளை விட்ட போதிலும் அதனை பயன்படுத்தி தென் ஆப்ரிக்கா வெற்றி பெற முயற்சிக்கவில்லை.

உலக கோப்பையில் நேற்று ஒரு முக்கிய போட்டி நடைபெற்றது. போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் தொடக்க வீரர்கள்அ அருமையான, சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

ஜமான், இமாம் ஆகிய இருவரும் தலா 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். இருவரையும் வீழ்த்தியர் பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர். பின்னர் பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங் (69 ரன்கள்), ஹாரிஸ் சொஹைலின் அதிரடி ஆட்டம் (89 ரன்கள்) காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 308 ரன்கள் என்ற அருமையான இலக்கை எட்டியது. இது ஒரு வகையில் நல்ல ஸ்கோர்.

அந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்.. இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த சின்ன மிஸ்டேக்! அந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்.. இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த சின்ன மிஸ்டேக்!

சொதப்பல் ரகம்

சொதப்பல் ரகம்

309 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்ரிக்க அணியில் டுபிளெசிஸ், டி காக் இருவரை தவிர மற்றவர் சொதப்பல் ரகம். ஆம்லா, மில்லர் ஆகிய நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ஏமாற்றினர். பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காததால் தென் ஆப்ரிக்க 259 ரன்கள் மட்டுமே எடுத்து, பாகிஸ்தானிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை விட்டும் வெளியேறி இருக்கிறது.

பீல்டிங் மோசம்

பீல்டிங் மோசம்

வெற்றி பெற்றுவிட்ட போதிலும், கடந்த போட்டிகளில் கிடைத்த அர்ச்ச்னைகளையும், வசவுகளையும் பாகிஸ்தான் நினைத்து பார்க்கவில்லை என்று தான் தோன்றுகிறது. அப்படி இருந்தது அந்த அணியின் பீல்டிங். வழக்கம் போலவே பீல்டிங்கில் படுமோசம்.

தென் ஆப்ரிக்கா மோசம்

தென் ஆப்ரிக்கா மோசம்

முக்கிய கேட்ச்களை விட்டு தள்ளினர். ஆனால் அந்த வாய்ப்புகளை கூட தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தி கொண்டு, வெற்றியை பெறவோ அல்லது எதிரணிக்கு நெருக்கடி அளிக்கவோ முன் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், பாகிஸ்தான் பீல்டிங்கை விட தென் ஆப்ரிக்க பேட்ஸ் மேன்கள் மோசமாக பேட்டிங் செய்தனர் என்று சொன்னால் தான் மிக பொருத்தமாக இருக்கும்.

மிஸ் செய்த கேட்ச்

மிஸ் செய்த கேட்ச்

டுபிளெசிஸ் விக்கெட்டுக்கு பிறகு மில்லரும் வான்டர் டசனும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, வஹாப் ரியாஸ் வீசிய 37வது ஓவரின் 4வது பந்தில் வான்டர் டசன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச்சை பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது கோட்டை விட்டார்.

இரண்டாவது கேட்ச்

இரண்டாவது கேட்ச்

இத்தனைக்கும் மிக எளிதான கேட்ச். சரி...இது தான் இப்படி என்றால், அதற்கு அடுத்த பந்தில் நடைபெற்ற சம்பவம் பாக். ரசிகர்களை ஆத்திரப்பட வைத்தது. மில்லரும் தேர்டு மேன் திசையில் ஒரு கேட்ச் கொடுத்தார். இதுவும் எளிதான கேட்ச் தான். ஆனால் அதை அங்கிருந்த பீல்டர் முகமது அமீர் தவறவிட்டார். ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 கேட்ச்களை பாகிஸ்தான் அணியினர் கோட்டைவிட்டனர் பாகிஸ்தான் வீரர்கள்.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

முக்கிய போட்டியில் சுறுசுறுப்பாகவும், ஆக்ரோஷமாகவும் இல்லாமல் அசட்டையாக இருந்து கேட்சுகளை விடுவதை பாக். ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லட்டு போன்ற இது மாதிரியான வாய்ப்புகளை கூட கோட்டை விட்ட தென் ஆப்ரிக்கா, வெற்றியின் பக்கம் போக வில்லை.

Story first published: Monday, June 24, 2019, 11:30 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
Pakistan players misses important catches against south Africa.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X