For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'மிஸ்டர் கூல்', வெற்றிகர கேப்டனை இழந்தது அணி.. ஓய்வு பெற்றார் பாகிஸ்தானின் 'டோணி'!

By Veera Kumar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த மிஸ்பா உல் ஹக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியை ஐசிசி தர வரிசையில் நம்பர்-1 டெஸ்ட் அணியாக உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரரான இவர், அந்த நாட்டின் டோணி என அழைக்கப்பட்டார்.

ஓய்வு பெற்ற மிஸ்பா உல் ஹக்கிற்கு 42 வயது 351 நாட்கள் ஆகிறது. அதாவது ஏறத்தாழ 43வது வயதை நெருங்கிவிட்டார்.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்ட் உடன் 75 டெஸ்டில் விளையாடி உள்ளார். டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்ற நிலையில் வெற்றியோடு மிஸ்பா உல் ஹக் விடை பெற்றுள்ளார்.

வயசானாலும் இளமை அப்படியே

வயசானாலும் இளமை அப்படியே

மிஸ்பா உல் ஹக் தனது, 35 வயதிற்குப் பிறகு 4509 ரன்கள் குவித்துள்ளார். கிரகாம் கூச் 4563 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 4139 ரன்களும் இந்த வயதில் குவித்துள்ளனர். மற்ற வீரர்கள் யாரும் 4000 ரன்களை அந்த வயதில் கடந்ததில்லை.

கேப்டனாகவும் அருமை

கேப்டனாகவும் அருமை

40 வயதிற்குப்பிறகு இரண்டாயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஜேக் ஹோப்ஸ் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளார். இப்படி பேட்டிங்கில் திறமை காட்டிய, மிஸ்பா உல் ஹக் கேப்டனாகவும் திறம்பட செயல்பட்டார்.

கூல் கேப்டன்

கூல் கேப்டன்

ஆக்ரோஷ கேப்டன்களையே பார்த்து பழகிய பாகிஸ்தானின் கூல் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஆகும். இம்ரான் கானுக்கு பிறகு, கேப்டன் என்ற வகையில் பாகிஸ்தான் அணியில் புகழ் பெற்ற ஒரே வீரர் மிஸ்பா உல் ஹக்.

வெற்றி, வெற்றி

வெற்றி, வெற்றி

மிஸ்பா உல் ஹக் தலைமையில் பாகிஸ்தான் 57 போட்டிகளில் ஆடி, அதில் 26 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 வருட காலம் தொடர்ந்து டெஸ்ட் அணி கேப்டனாக இருந்தார். பாகிஸ்தானில் இவ்வளவு நீண்ட காலம் கேப்டனாக இருந்தவர் இவர் மட்டுமே. இதன் உச்சமாக இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி, டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி ரேங்கில் முதலிடம் பிடித்து அசத்தியது.

வெளிநாடுகளில் சாதனை

வெளிநாடுகளில் சாதனை

மிஸ்பா தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை ஈட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், தென் ஆம்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் போன்றவர்கள் தலைமையில் அந்த நாட்டு அணிகள் வெளிநாடுகளில் வென்றதைவிட மிஸ்பாவின் பாக். அணி வெளிநாடுகளில் வென்ற போட்டிகள் அதிகம்.

டோணிக்கு பிறகு இவர்தான் வஸ்தாது

டோணிக்கு பிறகு இவர்தான் வஸ்தாது

இந்திய துணைக் கண்ட நாடுகளில் டோணி தலைமையிலான இந்தியாவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டித் தந்த அணியின் கேப்டன் என்ற பெருமையை மிஸ்பா பெற்றுள்ளார்.

Story first published: Monday, May 15, 2017, 14:44 [IST]
Other articles published on May 15, 2017
English summary
Misbah-ul-Haq will end up his international career with the second-most number of wins, after MS Dhoni, for any captain from the subcontinent.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X