For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பௌலர்கள் வருவாங்க... ரோபோட் மாதிரி பௌலிங் பண்ணுவாங்க இதுதான் நடக்கும்... அக்ரம் ஆரூடம்

கராச்சி : பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த ஐசிசி அனுமதி மறுத்துள்ள நிலையில், எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் பௌலர்கள் ரோபோக்கள் போல ஆகி விடுவார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் பௌலர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

எச்சிலுக்கு மாற்றை கண்டிப்பாக ஐசிசி நிர்வாகிகள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபோன்ற ஒரு விஷயத்தை தான் தன்னுடைய கேரியரில் அனுபவித்ததில்லை என்று தெரிவித்துள்ள அக்ரம், இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடரில் இதுகுறித்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

உலகிலேயே சிறந்த உலகிலேயே சிறந்த "வழுக்கைத் தலை" அணி.. அந்த இந்திய வீரருக்கு இடம் இல்லையா? கடுப்பான ரசிகர்கள்!

அதிகரிக்கும் உயிரிழப்புகள்

அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. தினம்தினம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இதை மீண்டும் துவங்கும் நோக்கத்தில் பல்வேறு விதிமுறைகளை ஐசிசி விதித்துள்ளது. அதில் ஒன்று பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுதான்.

வீரர்கள் எதிர்ப்பு

வீரர்கள் எதிர்ப்பு

இந்நிலையில் இந்த தடைக்கு சர்வதேச அளவில் அனைத்து தரப்பு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலங்காலமாக நடைமுறையில் உள்ள இந்த வழக்கத்தை தடுப்பதன்மூலம் பந்தை ஸ்விங் செய்வதில் தடை ஏற்படும் என்றும் இதன்மூலம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் போட்டிகள் மாறிவிடும் என்றும் போட்டிகளின் சுவாரஸ்யங்கள் குறைந்துவிடும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

வாசிம் அக்ரம் எச்சரிக்கை

வாசிம் அக்ரம் எச்சரிக்கை

இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் பௌலர் வாசிம் அக்ரம் பந்தை ஷைன் செய்ய எச்சிலுக்கு மாற்றை கண்டுபிடிக்க ஐசிசி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளார். எச்சிலை பயன்படுத்த தடை விதித்தால் பௌலர்கள் ரோபோக்கள் போல வருவார்கள். பந்து வீசுவார்கள், திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ள அவர், பந்தை ஸ்விங் செய்வது கடினமாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.

பௌலர்களுக்கு பொறுமை அவசியம்

பௌலர்களுக்கு பொறுமை அவசியம்

இதற்கென பந்து பழையதாக மாறும்வரை காத்திருந்து ஸ்விங் செய்ய முயலவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அக்ரம் கூறியுள்ளார். இதற்கென பௌலர்களுக்கு மிகுந்த பொறுமை தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பல நாடுகள் குளிர்பிரதேசங்களாக உள்ள நிலையில், வியர்வையை கொண்டு மட்டும் பந்தை ஷைன் செய்வது இயலாத காரியம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்ந்து பேசிய அக்ரம், தான் தன்னுடைய கேரியரில் இதுபோன்றதொடு விஷயத்தை அனுபவித்ததில்லை என்றும், அடுத்த மாதம் துவக்கத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் தொடரில் பௌலர்கள் எத்தகையதொரு அனுபவத்தை பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 10, 2020, 19:56 [IST]
Other articles published on Jun 10, 2020
English summary
Wasim Akram warned on Wednesday that bowlers would become "robots"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X