For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இளம் வீரர்களை அனுப்பி அசிங்கப்பட்ட பாக். அணி.. செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு.. என்ன நடந்தது?

ஓவல்: நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக ஆடி தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி நேற்று செய்தியாளர் சந்திப்பிற்கு இளம் வீரர்களை அனுப்பியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள வீரர்களை செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்பியது சர்ச்சையாகி உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தானின் தோல்வி காரணமாக அந்த அணிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியர்கள் வெளியில்.. இந்திய வீரர்கள் கூண்டில்.. என்ன நடக்கிறது? அதிர வைத்த பிசிசிஐ அதிகாரிஆஸ்திரேலியர்கள் வெளியில்.. இந்திய வீரர்கள் கூண்டில்.. என்ன நடக்கிறது? அதிர வைத்த பிசிசிஐ அதிகாரி

அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வெறும் 297 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது .

அதிரடி

அதிரடி

அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. முக்கியமாக கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி இரட்டை சதம் அடித்தார். 659 ரன்களுக்கு நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்தது.

மோசம்

மோசம்

அதன்பின் இறங்கிய பாகிஸ்தானை 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 176 ரன்கள் மற்றும் இன்னிங்சில் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் பாகிஸ்தானின் பீல்டிங், பவுலிங் இரண்டும் மிக மோசமாக இருந்தது. இந்திய அணியின் முதல் தர வீரர்களை விட மிக மோசமாக பாகிஸ்தான் வீரர்கள் ஆடினார்கள்.

 சிக்கல்

சிக்கல்

இதனால் பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மோசமாக ஆடி தொடர் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி நேற்று செய்தியாளர் சந்திப்பிற்கு இளம் வீரர்களை அனுப்பியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள வீரர்களை செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்பியது சர்ச்சையாகி உள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

பாகிஸ்தானின் இளம் வீரர்கள் ஷாப்பர் கோஹர், நசீம் ஷா ஆகியோர் நேற்று பாகிஸ்தான் சார்பாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் பாகிஸ்தான் வீரர்களிடம் செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் இருவரும் கடுமையாக திணறினார்கள். ஒரு கேள்விக்கு கூட பதற்றம் இன்றி அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

பாகிஸ்தானின் இளம் வீரர்களை இப்படி செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்பியது ஏன் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர். அதும் பாகிஸ்தான் அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் எல்லோரும் சொதப்பி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தான் தனது அணியின் கேப்டன் அல்லது கோச்சை செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்பி இருக்க வேண்டும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இளம் வீரர்களை அனுப்பியது ஏன் என்று முன்னாள் பாக். வீரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பாகிஸ்தான் அணியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். முக்கியமான கேப்டனை மாற்ற வேண்டும். பயிற்சியாளர் குழுவிலும் முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அக்தர் போன்ற மூத்த வீரர்கள் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர்.

Story first published: Wednesday, January 6, 2021, 12:15 [IST]
Other articles published on Jan 6, 2021
English summary
After the loss against New Zealand, Pakistan sends youth players for the press conference and gets slammed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X