For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"எங்கள அடிச்சியே, இப்ப நியூசி,யை அடி பாப்போம்.. வடிவேலு காமெடி போல் பாக்- ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்

அமீரகம்: உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இன்று சார்ஜா மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

 இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

 ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இந்நிலையில் இந்த போட்டி குறித்து சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதாவது வடிவேலு திரைப்பட காமெடியில், " நான் சின்னப்பையனு தானு என்ன அடிச்சுப்புட்ட, எங்கண்ண சிங்கத்துமேல கைவச்சு பார்" என்று ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். அதனைப்போன்று " முடிஞ்சா எங்கண்ண நியூசிலாந்த அடிச்சுப்பார் என பாகிஸ்தானுக்கு சவால் விட்டு வருகின்றனர். இதற்கு காரணம் நியூசிலாந்தை அவ்வளவு எளிதாக பாகிஸ்தான் வீழ்த்த முடியாது என்பது தான்.

முதல் தோல்வி

முதல் தோல்வி

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியாக இந்திய அணியை எதிர்கொண்டது. பெரிது எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்தியா செய்த தவறு

இந்தியா செய்த தவறு

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் சாஹீன் அஃப்ரிடி. இந்திய அணியின் தூண்களே, கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, சூர்யகுமார் என டாப் ஆர்டர் தான். ஆனால் அவர்கள் அனைவரையும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சாஹீன் அஃப்ரிடி சுலபமாக வீழ்த்திவிட்டார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்துவீச்சை விட ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்கு விளையாடுபவர்கள்.

Recommended Video

India படுதோல்விக்கு என்ன காரணம்? Virat Kohli வேதனை| IND Vs PAK | Oneindia Tamil
இந்தியர்கள் சந்தித்த சிரமம்

இந்தியர்கள் சந்தித்த சிரமம்

இந்தியாவில் அதிகப்படியான மைதானங்கள் ஸ்பின்னர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். எனவே அயல்நாடுகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் தனி கவனம் காட்டியுள்ளனர். அதுவும் பாகிஸ்தான் போன்ற வேகப்பந்துவீச்சை சமாளிப்பதில் ஏற்பட்ட பதற்றத்தில் தான் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பலம்வாய்ந்த நியூசிலாந்து

பலம்வாய்ந்த நியூசிலாந்து

ஆனால் நியூசிலாந்திடம் அந்த கதை எடுபடுவது கடினம். ஏனென்றால் நியூசிலாந்து வீரர்கள் வேகப்பந்துவீச்சை நன்கு சமாளிக்க தெரிந்தவர்கள். அவர்கள் நாட்டில் உள்ள மைதானங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தீனி போடும் வகையில் தான் இருக்கும். எனவே பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சு, இன்ஸ்விங்கெல்லாம் நியூசிலாந்திடம் எடுபடுவது சற்று கடினம் தான். எது எப்படியோ, இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான், நியூசிலாந்தையும் வீழ்த்திவிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, October 26, 2021, 12:24 [IST]
Other articles published on Oct 26, 2021
English summary
Pakistan and newzealand Clash today in sharjah, Tough match for Babar azam and co. in T20 Worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X