For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்ப அடிக்கணும்... எப்படி அடிக்கணும் எல்லாம் அவருக்கு தெரியும்... யாரப்பத்தி சொல்றாரு கமின்ஸ்!

சிட்னி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் மற்றும் தற்போதைய இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் ரிஷப் பந்த்.

இந்நிலையில் அவர் சிறப்பான வீரராக திகழ்ந்து வருவதாகவும் எங்கே மற்றும் எப்படி தாக்குவது என்பது குறித்து அறிந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய பௌலர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

குல்தீப், அக்சர், நதீம்.. 3 பேருமே கிடையாதாம்.. புதிய கையை களமிறக்கும் கோலி.. என்ன கேமா ஆடுறீங்க? குல்தீப், அக்சர், நதீம்.. 3 பேருமே கிடையாதாம்.. புதிய கையை களமிறக்கும் கோலி.. என்ன கேமா ஆடுறீங்க?

அடுத்ததாக இந்திய -ஆஸ்திரேலிய தொடருக்காக தற்போதே ரிஷப் பந்த்தை வீழ்த்தும் யுக்திகளை ஆஸ்திரேலியா தயார் படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான ரிஷப் பந்த்

சிறப்பான ரிஷப் பந்த்

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடினார் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த். சிட்னியில் 97 ரன்களையும் காப்பாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 89 ரன்களையும் குவித்து தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

91 ரன்கள் குவிப்பு

91 ரன்கள் குவிப்பு

ரிஷப் பந்த்தின் விக்கெட்டை எடுப்பதற்கு ஆஸ்திரேலியா பௌலர்கள் பிரம்ம பிரயத்தனம் மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் 91 ரன்களை எடுத்துள்ளார் ரிஷப் பந்த். அவரின் இந்த முயற்சி வீணான நிலையிலும் தன்னுடைய பொறுப்பை சிறப்பாக மேற்கொண்டுள்ளார்.

பாட் கமின்ஸ் பாராட்டு

பாட் கமின்ஸ் பாராட்டு

இந்நிலையில் இந்திய அணியின் சிறப்பான வீரராக ரிஷப் பந்த் திகழ்வதாகவும் அவருக்கு எந்த நேரத்தில் எப்படி தாக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய பௌலர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். பந்த் தன்னுடைய ஆட்டத்தை நன்கு அறிந்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வேகமாக நகரும் ஆட்டம்

வேகமாக நகரும் ஆட்டம்

புஜாரா இருந்தாலும் போட்டி வேகமாக நகராது என்றும் ஆனால் பந்த் வந்து ஆடினால், அந்த ஆட்டம் மிகவேகமாக செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அடுத்ததாக இந்தியா -ஆஸ்திரேலியா மோதவுள்ள போட்டியில் பந்த்தை வீழ்த்துவது குறித்து தற்போதே திட்டங்களை ஆஸ்திரேலிய அணி தயாராக வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, February 11, 2021, 17:50 [IST]
Other articles published on Feb 11, 2021
English summary
He knows when to attack and what his scoring areas -Pat Cummins
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X