For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்ல தோனியோட கம்பேர் செஞ்சாங்க... இப்ப சாஹாவோட கம்பேர் செய்யறாங்க... சுட்டிக்காட்டிய அஸ்வின்!

சென்னை : விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் சிறப்பான திறமையை கொண்டுள்ளதாக ஸ்பின்னர் ரவி அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தன்னை வலிமையாக்கி கொள்வார் என்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டால் மட்டுமே போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

29வது 5 விக்கெட் சாதனை... அபார அஸ்வின்... இன்னா பௌலிங்... கலக்குறீங்க அஸ்வின்! 29வது 5 விக்கெட் சாதனை... அபார அஸ்வின்... இன்னா பௌலிங்... கலக்குறீங்க அஸ்வின்!

பந்த்தின் கீப்பிங்கை முதலில் முன்னாள் கேப்டன் தோனியுடனும் தற்போது விரித்திமான் சாஹாவுடனும் அனைவரும் ஒப்பிடுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிறப்பான ரிஷப் பந்த்

சிறப்பான ரிஷப் பந்த்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிரடி ரன்களை குவித்து வருவதுடன் அவரது கீப்பிங்கிலும் அதிக முன்னேற்றம் காணப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் சிறப்பான கீப்பிங்கை மேற்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒப்பிடுவது தவறானது

ஒப்பிடுவது தவறானது

கடந்த காலங்களில் அவரை முன்னாள் கேப்டன் தோனியுடனும் தற்போது விரித்திமான் சாஹாவுடனும் விக்கெட் கீப்பிங்கில் அனைவரும் ஒப்பிட்ட நிலையில், தான் தன்னுடைய பெயரை நிலைநாட்ட விரும்புவதாகவும் தோனி போன்ற ஜாம்பவான்களுடன் தன்னை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றும் முன்னதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

ரவி அஸ்வின் பாராட்டு

ரவி அஸ்வின் பாராட்டு

இந்நிலையில் நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்பின்னர் ரவி அஸ்வின், ரிஷப் பந்த் சிறப்பான திறமையை கொண்டுள்ளதாகவும் அவர் தன்னை தொடர்ந்து வலிமையாக்கிக் கொள்வார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான ரிஷப் பந்த்

சிறப்பான ரிஷப் பந்த்

அவருக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே அவர் சிறப்பாக முன்னேறுவார் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கீப்பிங்கில் தோனி மற்றும் தற்போது சாஹாவுடன் அவரை ஒப்பிடுவதை சுட்டிக் காட்டிய ரவி அஸ்வின், ரிஷப் சிறப்பான திறமையை கொண்டுள்ளதை அவர் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் விளையாடும்போது தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, February 15, 2021, 11:16 [IST]
Other articles published on Feb 15, 2021
English summary
Rishabh Pant has the ability and will go strength to strength -Ravi Ashwin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X