தோனி கிடையாது.. இவர்தான் சிறந்த கேப்டன்.. காரணம் இதுதான்.. பார்த்திவ் பட்டேல் அதிரடி!

மும்பை : சவுரவ் கங்குலி, தோனி இருவருமே இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்திய அணியின் வளர்ச்சியில் இருவருக்குமே பெரும் பங்கு உண்டு. கடந்த சில நாட்களாக விமர்சகர்கள் மத்தியில் அவர்கள் இருவரில் யார் சிறந்த கேப்டன்கள் என்ற விவாதம் நடந்து வருகிறது.

இதுபற்றி பார்த்திவ் பட்டேல் தன் கருத்தை கூறினார். அவர் கங்குலியை சிறந்த கேப்டன் என தேர்வு செய்து இருக்கிறார்.

ஆஷஸ் தொடர் போல சிறப்பானது... ரசிகர்கள், வீரர்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு முக்கியம்

மேட்ச் பிக்ஸிங்

மேட்ச் பிக்ஸிங்

2000மாவது ஆண்டில் இந்திய அணியில் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் வெடித்தது. அதனால், இந்திய அணி துவண்டு இருந்தது. அப்போது அணியின் கேப்டனாக ஆனார் கங்குலி. அப்போதைய அணி அத்தனை வலுவான அணியாக இல்லை.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

சில நல்ல வீரர்கள் இருந்தனர். ஆனாலும், அணி பலவீனமாக இருந்தது. அப்போது இளம் வீரர்களை அணியில் சேர்த்து அணியை வலுப்படுத்தினார் கங்குலி. அவர் தேர்வு செய்த வீரர்கள் பலர் பின்னாட்களில் பெரும் புகழ் பெற்றனர். சேவாக், யுவ்ர்ஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங்,தோனி உள்ளிட்டோர் கங்குலியால் ஆதரிக்கப்பட்ட வீரர்களே.

வெற்றிகள்

வெற்றிகள்

கங்குலி கேப்டன்சியில் இந்திய அணி சில முக்கிய வெற்றிகளை பெற்றது. 2001 கொல்கத்தா டெஸ்ட், 2002 நாட்வெஸ்ட் தொடர் வெற்றி, 2002 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை சமன், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றிகள், பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் வெற்றி என பல முக்கிய வெற்றிகளை பெற்றது.

தோனி

தோனி

அடுத்து தோனி இந்திய அணிக்கு கேப்டன் ஆன போது அணி ஓரளவு நிலையாக இருந்தது. ஆனாலும், 2007 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டு இந்திய அணி துவண்டு இருந்தது. அதில் இருந்து அணியை மீட்டார் தோனி.

கோப்பைகள்

கோப்பைகள்

அவரது தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி என இந்திய அணி பல முக்கிய கோப்பைகளை வென்று சாதனை படைத்தது. டெஸ்ட் தரவரிசையிலும் முதன்முறையாக முதல் இடம் பிடித்தது.

பார்த்திவ் பட்டேல்

பார்த்திவ் பட்டேல்

இவர்கள் இருவர் இடையே யார் சிறந்த கேப்டன் என பார்த்திவ் பட்டேல் தேர்வு செய்தார். அவர் கங்குலி, தோனி இருவரின் கீழும் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இருவரின் முக்கிய அம்சங்களையும் பட்டியலிட்டார்.

பெரிய வெற்றிகள்

பெரிய வெற்றிகள்

தோனி நிறைய கோப்பைகள் வென்றுள்ளார். கங்குலி கடினமான நேரத்தில் அணியை வளர்த்தார், வெளிநாடுகளில் வெல்லும் அணியை கட்டமைத்தார் என்றார். அதற்கு முன்னும் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகள் பெற்று இருந்தாலும் அவர் தலைமையில் சில பெரிய வெற்றிகளை பெற்றது என குறிப்பிட்டார்.

கங்குலி தான் சிறந்த கேப்டன்

கங்குலி தான் சிறந்த கேப்டன்

தோனி நிறைய கோப்பைகள் வென்ற கேப்டன். அவர் அளவுக்கு யாருமே கோப்பைகள் வென்றதில்லை. ஆனால், என்னைக் கேட்டால் என் ஓட்டு கங்குலிக்கு தான். அவர் தான் அணியை முதலில் இருந்தே கட்டமைத்தார் என்று கூறினார் பார்த்திவ் பட்டேல்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Parthiv Patel picks Sourav Ganguly over Dhoni as best captain of India
Story first published: Monday, July 20, 2020, 17:10 [IST]
Other articles published on Jul 20, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X