For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெக்கிராத்துக்கு இணையான பந்துவீச்சாளர்.. பார்த்திவ் பட்டேல் சொல்லும் அந்த முன்னாள் இந்திய வீரர்!

மும்பை : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது.

ஆனால், கடந்த 20, 30 ஆண்டுகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு அத்தனை சிறப்பானதாக இல்லை. ஒரு சில வேகப் பந்துவீச்சாளர்களே சிறப்பாக பந்து வீசினார்கள்.

அவர்களில் ஒருவர் தான் ஜவகல் ஸ்ரீநாத். கபில் தேவுக்குப் பின் இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த வேகப் பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தான்.

அவரெல்லாம் வேற லெவல்... அவரோட ஆடுறது என்னோட அதிர்ஷ்டம்... வில்லியம்சன்அவரெல்லாம் வேற லெவல்... அவரோட ஆடுறது என்னோட அதிர்ஷ்டம்... வில்லியம்சன்

மெக்கிராத்துக்கு இணையாக..

மெக்கிராத்துக்கு இணையாக..

கிளென் மெக்கிராத் அளவுக்கு இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் இல்லை என முன்பு விமர்சனம் வைக்கப்படும். அது குறித்து தற்போது பேசி உள்ள விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல், ஜவகல் ஸ்ரீநாத், மெக்கிராத்துக்கு இணையாக பந்து வீசியதாக தன் அனுபவத்தை வைத்து கூறி உள்ளார்.

இரண்டு முன்னணி பந்துவீச்சாளர்கள்

இரண்டு முன்னணி பந்துவீச்சாளர்கள்

பார்த்திவ் பட்டேல் 2002இல் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்றார். அப்போது ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஜாகிர் ஜான் என இரண்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களும் அணியில் இருந்தனர்.

கடினம்

கடினம்

அவர்கள் இருவருக்கும் விக்கெட் கீப்பிங் செய்யும் வாய்ப்பு பார்த்திவ் பட்டேலுக்கு கிடைத்தது. அவர்களுக்கு கீப்பிங் செய்தது கடினமாக இருந்ததாக கூறிய அவர் இந்தியாவில் அவர்கள் பந்துவீச்சுக்கு கீப்பிங் செய்ய தான் ஸ்டம்புகளுக்கு சற்று அருகே நின்று கொண்டதாக கூறினார்.

சிறப்பாக பந்து வீசினார்

சிறப்பாக பந்து வீசினார்

பலரும் கிளென் மெக்கிராத் பற்றியே பேசுகிறார்கள். நான் முதல் முறை கீப்பிங் செய்த போது ஸ்ரீநாத் அந்த இடத்தில் இருந்தார். அவர் சரியான நேரத்தில், நல்ல வேகம் மற்றும் பவுன்ஸில் பந்து வீசினார் என்று குறிப்பிட்டார் பார்த்திவ் பட்டேல்.

ஸ்ரீநாத்தின் கடைசி டெஸ்ட்

ஸ்ரீநாத்தின் கடைசி டெஸ்ட்

பார்த்திவ் பட்டேல் ஜவகல் ஸ்ரீநாத்தின் கடைசி டெஸ்ட் போட்டியிலும் கீப்பிங் செய்துள்ளார். ஆம், பார்த்திவ் பட்டேலின் அறிமுக தொடரான அதே டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டிக்குப் பின் ஸ்ரீநாத் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடவில்லை.

ஷான் பொல்லாக் பாராட்டு

ஷான் பொல்லாக் பாராட்டு

முன்னதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் ஷான் பொல்லாக் ஜவகல் ஸ்ரீநாத் மறக்கப்பட்ட சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என அவர் குறித்து பாராட்டி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநாத்துக்கு வேகப் பந்துவீச்சில் சரியான ஜோடி கிடைக்காமல் அவரது புகழ் வெளியே தெரியாமல் போய் விட்டது என அவர் கூறி இருந்தார்.

Story first published: Sunday, June 7, 2020, 21:47 [IST]
Other articles published on Jun 7, 2020
English summary
Parthiv Patel says Javagal Srinath was right up there with Glenn McGrath in terms of quality bowling.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X