For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முன்னாள் கிரிக்கெட் வீரர் விவாகரத்து... கொடுமைப்படுத்திய மனைவி ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு

காந்திநகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் தல்பீர் சிங்கிற்கு விவாகரத்து வழங்கிய குஜராத் நீதிமன்றம், அவரைக் கொடுமைப்படுத்திய அவரது மனைவி மாதம் ரூ 10,000 ஜீவனாம்சம் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக விவாகரத்து வழக்குகளில் மனைவ்க்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுவது தான் வழக்கம். கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்கும் தீர்ப்பு மிக அரிதாகத் தான் வழங்கப் படுகின்றன.

அந்தவகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு, விபத்தில் படுகாயமடைந்த அவரைக் கொடுமைப்படுத்திய அவரது மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

விபத்து...

விபத்து...

சச்சின் டெண்டுல்கருடன் 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தவர் தல்பீர் சிங் என்ற வீரர். இவர் கடந்த 2002ம் ஆண்டு சாலை விபத்தொன்றில் சிக்கி கால்களில் படுகாயமடைந்தார்.

அறுவைச் சிகிச்சை...

அறுவைச் சிகிச்சை...

மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட தல்பீருக்கு, கடந்த 2010ம் ஆண்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சைக்கான செலவை சச்சின் வழங்கினார்.

கொடுமைகள்...

கொடுமைகள்...

சிகிச்சைக்குப் பின்னர், தல்பீரை அவரது மனைவி ரஜ்வீந்தர் கவுர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளார். நடக்க முடியாமல் இருந்த அவரை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளார்.

விவாகரத்து...

விவாகரத்து...

இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தல்பீரை மீட்டனர். பின்னர், மனைவிக்கு எதிராக காந்தி நகர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார் தல்பீர்.

ஜீவனாம்சம்...

ஜீவனாம்சம்...

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி டி.டி.சோனி, தல்பீர் சிங்கிற்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், தல்பீர் சிங்கிற்கு அவரது மனைவி மாதம் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தரவும் உத்தரவிட்டார்.

Story first published: Sunday, July 20, 2014, 13:27 [IST]
Other articles published on Jul 20, 2014
English summary
In a rare judgement on a divorce petition, a Gujarat court today ordered a woman to pay alimony to her physically challenged husband, a former cricketer, who accused her of causing physical and mental torture.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X