For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க ரெண்டு பேரும் இருக்கற வரைக்கும் அசாம்தான் பாகிஸ்தான் கேப்டன்... வாசிம் கான் உறுதி

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிபி சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் மற்றும் பிசிபி தலைவர் ஈசான் மணி பதவியில் உள்ளவரை பாகிஸ்தான் கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் பாபர் அசாம்தான் கேப்டனாக நீடிப்பார் என்றும் வாசிம் கான் கூறியுள்ளார்.

பாபர் அசாம் மிகச்சிறந்த வீரர், இளம் வயதுடையவர் மற்றும் மனதளவில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் வாசிம் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்... சிபிஎல்ல ஒரு கை பார்த்தாச்சு... அடுத்ததா அமெரிக்க டி20 லீக் தான்.. ஷாருக் அதிரடிஐபிஎல்... சிபிஎல்ல ஒரு கை பார்த்தாச்சு... அடுத்ததா அமெரிக்க டி20 லீக் தான்.. ஷாருக் அதிரடி

3 வடிவங்களிலும் அசாம் கேப்டன்

3 வடிவங்களிலும் அசாம் கேப்டன்

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் 3 வடிவங்களுக்கும் கேப்டனாக இளம் வீரர் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிபி சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார். பாபர் அசாம் மிகவும் சிறப்பான வீரர், இளம் வயதுடையவர் மற்றும் மனதளவில் மிகவும் உறுதியாக அவர் காணப்படுவதால் இந்த பொறுப்பை அவர் திறம்பட நிர்வகிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாசிம் கான் திட்டவட்டம்

வாசிம் கான் திட்டவட்டம்

மேலும் அடிக்கடி கேப்டன் பொறுப்பை மாற்றுவதை தவிர்க்கும்வகையில் அசாம் நீண்ட நாட்களுக்கு கேப்டனாக இருப்பார் என்றும், தான் மற்றும் பிசிபி தலைவர் ஈசான் மணி ஆகியோர் பொறுப்பில் உள்ளவரை அசாமும் கேப்டனாக நீடிப்பார் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கண்காணித்த பிசிபி

கண்காணித்த பிசிபி

அவரை முதலில் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் கேப்டனாக நியமித்து கண்காணித்ததாகவும், அவர் சிறப்பாக செயல்பட்டதையடுத்து டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக நிமியத்துள்ளதாகவும் கான் மேலும் குறிப்பிட்டார். அவருக்கு மிகவும் சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

டெஸ்ட் கேப்டனாக விருப்பம்

டெஸ்ட் கேப்டனாக விருப்பம்

இதுகுறித்து ஈசான் மணி பாபருடன் கலந்தாலோசித்ததாகவும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பு வகிக்க அவர் விருப்பம் தெரிவித்ததாகவும் கான் மேலும் கூறினார். மேலும் இந்த பொறுப்பால் தன்னுடைய பேட்டிங்கில் எந்த குறைவும் ஏற்படாது என்று பாபர் உறுதி அளித்துள்ளதாகவும் வாசிம் கான் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, December 1, 2020, 18:29 [IST]
Other articles published on Dec 1, 2020
English summary
Babar himself showed keen interest in becoming Test captain -Wasim Khan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X