For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி சதம் அடித்தால் இந்தியர்களுக்கு போதும்.. நம்ம என்ன அப்படியா? மீண்டும் வம்பிழுத்த ரமீஸ் ராஜா

லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது நாட்டு அணியை மிகவும் விமர்சிப்பதாக கேப்டன் பாபர் அசாம் தம்மிடம் வருத்தப்பட்டதாக ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தான அணி நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது.

இதற்கான அணி நியூசிலாந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

77 பந்துகளில் 205 ரன்கள்.. கிரிக்கெட் உலகையே அதிரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. டி20ல் புது சாதனை! 77 பந்துகளில் 205 ரன்கள்.. கிரிக்கெட் உலகையே அதிரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. டி20ல் புது சாதனை!

வருத்தப்பட்ட பாபர் அசாம்

வருத்தப்பட்ட பாபர் அசாம்

அப்போது பாகிஸ்தான் அணி மீது எப்போதும் விமர்சனமே வருவதாகவும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை சென்றும் ரசிகர்கள் சாடுவதாகவும் பாபர் அசாம் வருத்தப்பட்டதாக அவர் கூறினார். மற்ற விளையாட்டு போல் அல்லாமல் பாகிஸ்தானில் கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.இதனால் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு கருத்து இருக்கும் என்று பாபர் அசாமிடம் தாம் சமாளித்ததாக அவர் கூறினார்.

இந்தியா மீது விமர்சனம்

இந்தியா மீது விமர்சனம்

பாகிஸ்தான அணி இதற்கு முன்னாள் ஆசிய கோப்பையில் முதல் சுற்றித் தாண்டவே சிரமப்படும். ஆனால் இம்முறை நாம் இறுதி போட்டி வரை சென்றோம். ஆனால் இறுதி ஆட்டத்தில் நமக்கு மோசமான நாளாக அமைந்தது. ஆனால் ஆசிய கோப்பையில் மற்ற அணிகளும் உள்ளன. பாகிஸ்தானை விட இந்தியா தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

கோலியின் சதம் போதும்

கோலியின் சதம் போதும்

ஏனெனில் அவர்கள் இறுதிப் போட்டி கூட செல்லவில்லை. ஆனால் அந்நாட்டு ஊடகங்களும் ரசிகர்களும் இந்திய அணியை விமர்சிக்கவில்லை.ஏனென்றால் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசினார். இதன் மூலம் ஆசியக் கோப்பை தோற்றத்தையே இந்திய ரசிகர்கள் மறந்து விட்டனர் .

நம்ம என்ன அப்படியா?

நம்ம என்ன அப்படியா?

ஆனால் நாம் இப்படி என்றாவது செய்வோமா? பாபர் அதாம் விளாசினால் கூட அவருடைய ஸ்ட்ரைக் 135 தான் இருக்கிறது. டேவிட் வார்னர் ஸ்ட்ரைக் ரேட் 147 இருக்கிறது என்று விமர்சனம் செய்வோம். இந்த விமர்சனம் எல்லாம் தேவையற்றது என்று ரமிஸ் ராஜா கூறினார். இந்தியா பாகிஸ்தான் அணி வரும் 23ஆம் தேதி மென்பொருள் டி20 உலக கோப்பை தொடரில் மோதுகின்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 7, 2022, 11:15 [IST]
Other articles published on Oct 7, 2022
English summary
PCB Chairman Rameez raja compares virat kohli and babar azam கோலி சதம் அடித்தால் இந்தியர்களுக்கு போதும்.. நம்ம என்ன அப்படியா? மீண்டும் வம்பிழுத்த ரமீஸ் ராஜா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X