For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க கெஞ்சலை.. எங்களோட கிரிக்கெட் ஆடணும்னு தான் சொல்றோம்.. இந்தியாவிடம் “கெஞ்சாமல்” கேட்கும் பாக்.

துபாய் : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி இந்தியாவுடன் இருதரப்பு கிரிக்கெட் ஆடுவது குறித்து ஐசிசி உதவ வேண்டும் என கூறியுள்ளார்.

இந்தியா கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் உடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில்லை.

இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு எதிரானது. இந்தியா, பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் ஐசிசி-யில் புகார் அளித்து வழக்கு நடத்தி வருகிறது.

ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது பற்றி எஹ்சான் மானி கூறுகையில், "நான் ஐசிசியில் பதவியில் இருந்த போது இது பற்றி பேசி இருக்கிறேன். இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் இருக்கிறேன். நிச்சயம் இது பற்றி ஐசிசி தலையிட்டு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவேன்" என கூறியுள்ளார்.

அது மட்டும் ஏன் ஆடறீங்க?

அது மட்டும் ஏன் ஆடறீங்க?

பாகிஸ்தானுடன், இந்தியா இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடாவிட்டாலும், ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடி வருகிறது. இதை எதிர்த்தும் கேள்வி கேட்டுள்ளார் மானி. பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் ஆடவில்லை என்றால், ஐசிசி தொடர்களில் மட்டும் ஏன் ஆட வேண்டும் என கேட்கிறார் மானி.

இப்படி யாரும் சண்டை போட்டதே இல்லை

இப்படி யாரும் சண்டை போட்டதே இல்லை

"ஐசிசி வரலாற்றில் இரண்டு கிரிக்கெட் போர்டுகள் இப்படி ஒரு வழக்குக்காக சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. நான் இந்த வழக்கு போடப்பட்ட காலத்தில் இருந்திருந்தால், பேச்சுவார்த்தை மூலம் இதை அணுகி இருப்பேன்" என மானி கூறினார். தற்போது இந்தியாவிடம் 70 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் ஐசிசி-யில் புகார் அளித்துள்ளது. இதனால், பேச்சுவார்த்தை மேலும் சிக்கலாகி உள்ளது என்பதையே மானி குறிப்பிடுகிறார்.

நான் கெஞ்சவில்லை

நான் கெஞ்சவில்லை

மேலும், "என் நோக்கம் கிரிக்கெட் ஆட வேண்டும் என கெஞ்சுவது அல்ல. சரிசமமாக பேச வேண்டும் என்பதே. நாங்கள் விளையாடத் தயாராக இருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் பேசுவோம். அது தோற்றால் ஐசிசியிடம் செல்லலாம்" என கூறியுள்ளார் மானி.

எல்லாம் அரசியல்

எல்லாம் அரசியல்

பாகிஸ்தான் கெஞ்சவில்லை என கூறினாலும், இந்தியா இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பற்றி மூச்சு கூட விடவில்லை. அப்படி பார்த்தால், பாகிஸ்தான் மட்டுமே இதை பெரிய விஷயமாக கருதி கிரிக்கெட் ஆட வரவேண்டும் என கூறி வருகிறது. இது கெஞ்சுவது இல்லையோ? சரி, இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடினால், இந்தியாவுக்கு என்ன நஷ்டம்? எல்லாம் அரசியல் விளையாட்டு.. வேறென்ன சொல்ல..

Story first published: Monday, November 12, 2018, 16:50 [IST]
Other articles published on Nov 12, 2018
English summary
PCB Chairman wants ICC to restore bilateral series with India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X