For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலக கோப்பை இந்த ஆண்டு கண்டிப்பா நடக்காது... சாத்தியமே இல்லை... ஈசான் மணி

கராச்சி : ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை நடைபெற சாத்தியமே இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மணி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், கிரிக்கெட் உலகம் இந்த நேரத்தில் டி20 உலக கோப்பையை நடத்தும் ரிஸ்க்கை எடுக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ், இத்தகைய நெருக்கடியான நேரத்தில் 16 அணிகளை ஒரே இடத்தில் வைத்து டி20 உலக கோப்பையை நடத்த முடியாது என்று தெரிவித்திருந்தார்.

டி20 உலக கோப்பை, ஐபிஎல் ரெண்டுமே ஆடணும்... ரோகித் சர்மா விருப்பம் டி20 உலக கோப்பை, ஐபிஎல் ரெண்டுமே ஆடணும்... ரோகித் சர்மா விருப்பம்

சாத்தியமில்லாத சூழல்

சாத்தியமில்லாத சூழல்

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொடரை நடத்த முடியாத சூழலில் உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக டி20 உலக கோப்பை தொடரை நடத்த முடியாத சூழல் அங்கு நிலவுகிறது.

பயணக்கட்டுப்பாடுகள்

பயணக்கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள சூழலில் பல்வேறு நாடுகளிலும் பயணக்கட்டுப்பாடுகள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ், இத்தகை யநெருக்கடி சூழலில் 16 அணிகளை ஒரே இடத்தில் வைத்து டி20 உலக கோப்பையை நடத்துவது சாத்தியப்படாது என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகம் ரிஸ்க் எடுக்காது

கிரிக்கெட் உலகம் ரிஸ்க் எடுக்காது

இதே கருத்தையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மணியும் தற்போது கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் டி20 உலக கோப்பையை நடத்தும் ரிஸ்க்கை கிரிக்கெட் உலகம் எவ்வாறு மேற்கொள்ளும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட காலங்களில் இந்த ஆண்டின் உலக கோப்பை நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுகாதாரத்தை பேண முடியாது

சுகாதாரத்தை பேண முடியாது

எவ்வாறாகிலும் ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் மட்டுமே இந்த தொடர் நடத்தப்பட வேண்டிய சூழல் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ள மணி, 16 அணிகளை ஒரே இடத்தில் கொண்டு சுகாதார முறையில் இந்த போட்டிகளை நடத்துவது சாத்தியப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் குறித்து முடிவெடுக்க கடந்த வாரத்தில் கூடிய ஐசிசி உறுப்பினர்கள், இதன் முடிவை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 18, 2020, 13:55 [IST]
Other articles published on Jun 18, 2020
English summary
Trying to get 16 countries into Australia is unrealistic -CA chairman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X