For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த 10 ஆண்டுக்கான ஐசிசி தொடர்கள்.. உரிமையை சுருட்ட ஸ்கெட்ச் போட்ட பாகிஸ்தான்.. ஐசிசிக்கு கடிதம்!

லாகூர்: அடுத்த 10 ஆண்டுகளில் பல்வேறு ஐசிசி தொடர்களை பாகிஸ்தானில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஸ்கெட்ச் போட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருகிறது.

முதலில் இந்தியாவில் நடைபெறவிருந்த இந்த தொடர் கொரோனா காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடிதம்

பாகிஸ்தான் கடிதம்

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு வரிசையாக சாம்பியன்ஸ் டிராபி, 2022 டி20 உலகக்கோப்பை என வரிசையாக ஐசிசி தொடர்கள் வரவுள்ளன. இந்நிலையில் அவை அனைத்திற்கும் பாகிஸ்தான் ஸ்கெட்ச் போட்டுள்ளது. அதாவது அடுத்த 10 ஆண்டுகளில் (2021- 2031) 6 ஐசிசி தொடர்களை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் ஐசிசி-க்கு அனுப்பி வைத்துள்ளது. எனினும் இவை அனைத்தையும் வேறு ஏதேனும் நாட்டுடன் இணைந்து நடத்தவே பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

பட்டியல் விவரம்

பட்டியல் விவரம்

2025 மற்றும் 2029ம் ஆண்டுகளில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக 3 மைதானங்களை தர பாகிஸ்தான் முன்வந்துள்ளது. அடுத்ததாக 2026 மற்றும் 2028ம் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக 8 மைதானங்களை தர தயாராக உள்ளது. பின்னர் 2027 மற்றும் 2031ம் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக 10 மைதானங்கள் தரப்படும் என விருப்பம் தெரிவித்துள்ளது.

 அதிகரிக்கும் மைதானங்கள்

அதிகரிக்கும் மைதானங்கள்

பாகிஸ்தானில் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மைதானங்களை உருவாக்குவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்போதைக்கு கராச்சி, லாகூர், முல்தான், ராவல்பிண்டி, பெஷாவர் என 5 முக்கிய மைதானங்கள் அந்நாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை வரும் வருடங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி தொடர்கள்

ஐசிசி தொடர்கள்

ஏற்கனவே ஐசிசி போட்டு வைத்துள்ள திட்டப்படி டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்ததாக அமீரகத்தில் நடத்தப்படுகிறது. மற்றொரு புறம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்கள் அடுத்ததாக வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து நடத்தப்படவுள்ளன. எனவே இதில் அனைத்து நாடுகளிடமும் இருந்து பாதி உரிமையை வாங்கிக்கொள்ள பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

Story first published: Friday, July 2, 2021, 21:23 [IST]
Other articles published on Jul 2, 2021
English summary
Pakistan Cricket Board eyeing to host coming World Cups with Bangldesh, Srilanka and UAE
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X