For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்!

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஐபிஎல்-லை போன்றே நடத்திய பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பல குளறுபடிகளால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

"புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது" என்பார்கள். அதே போல, கிரிக்கெட் உலகில் புரட்சியை ஏற்படுத்திய இந்தியாவின் ஐபிஎல் தொடரை போல பாகிஸ்தான் துவங்கிய டி20 லீக் தொடரை துவங்கியது.

அறிக்கை

அறிக்கை

அதில் தான் ஏராளமான நஷ்டத்தை சந்தித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. இந்த விவகாரம், பாகிஸ்தான் நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு, வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் புரட்சி

ஐபிஎல் புரட்சி

டி20 போட்டிகளை புரட்சிகரமாக லீக் தொடராக மாற்றியது இந்தியாவின் கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ. அதை பல கிரிக்கெட் ஆடும் நாடுகளும் அதை பின்பற்றி டி20 தொடர்களை துவங்கின. அந்த வரிசையில் பாகிஸ்தானும் சேர்ந்தது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடரை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பாகிஸ்தான் நாட்டிற்கு பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் வர அச்சம் தெரிவித்ததால், சில போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற்றன.

பல சர்ச்சைகள்

பல சர்ச்சைகள்

கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த தொடரில் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. வீரர்கள் பலர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினர். சிலர் தடையும் செய்யப்பட்டனர். இதற்கிடையே தான் இந்த தொடர் நடந்து வருகிறது.

பல கோடி நஷ்டம்

பல கோடி நஷ்டம்

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகளை தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதில் பல குளறுபடிகளால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

உள்குத்து வேலைகள்

உள்குத்து வேலைகள்

அந்த தொடரில் பங்கு பெறும் அணிகளுக்கு கொடுக்கப்பட்ட லாபத்தில் சில உள்குத்து வேலைகள் நடந்துள்ளன. கணக்கு வழக்குகள் பார்க்காமல், முன் பணமாக ஏராளமான பணத்தை வாரிக் கொடுத்துள்ளனர். அந்த வகையில் மட்டுமே 24.8 கோடி நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

ஏலத்தில் நஷ்டம்

ஏலத்தில் நஷ்டம்

மேலும், அணிகளை ஏலம் விட்டத்திலும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அந்த சூப்பர் லீக் நிர்வாகத்திற்கு தேவையே இல்லாமல் செலவுத் தொகையாக 5.45 கோடி கொடுத்துள்ளது.

வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம்

வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம்

மேலும், வெளிநாட்டு வங்கிகளுக்கு சரியான காரணம் இன்றி சுமார் 14.5 கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. சில ஒளிபரப்பு உரிமைகள் விற்காமல் போனதில் 1.3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அரசு கட்டுப்பாடு

அரசு கட்டுப்பாடு

இந்தியாவை பார்த்து டி20 தொடர் துவங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பிசிசிஐ போல பணத்தை அள்ளத் தெரியாவிட்டாலும், நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், பல உள்ளடி வேலைகளால் பணத்தை இழந்து அவமானப்பட்டு நிற்கிறது.

இம்ரான் கான்

இம்ரான் கான்

ஏற்கனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டு விமர்சனத்தை சந்தித்தது. அப்போது முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் என்ற முறையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அணியை மாற்றிக் காட்டுவதாக கூறினார். இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவரை மேலும் இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

Story first published: Thursday, September 19, 2019, 15:42 [IST]
Other articles published on Sep 19, 2019
English summary
PCB loses in multiple crores by conducting PSL T20 league in a controversial way
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X