For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெண்டு லட்டும் அவருக்கு தான்.. அவர் வேணாம்னு சொன்னாலும் விட மாட்டோம்.. அடம்பிடிக்கும் பாக்!

கராச்சி : பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக்கிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவருக்கு பதவிகளை வாரிக் கொடுக்க முன்வந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி தற்போது காலியாக உள்ளது. அதோடு சேர்த்து இன்னொரு பதவியையும் மிஸ்பா உல் ஹக்கிற்கு தர பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு துடித்துக் கொண்டு உள்ளது.

ஆனால், அவர் எனக்கு இந்த கட்டாயக் கல்யாணம் வேண்டாம் என தெறித்து ஓடுவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன தான் நடக்குது? யார் இந்த மிஸ்பா?

மிஸ்பா உல் ஹக்

மிஸ்பா உல் ஹக்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தான் மிஸ்பா உல் ஹக். அவர் காலத்தில் பாகிஸ்தான் அணி ஓரளவு சிறப்பாக செயல்பட்டது. அவரது கேப்டன்சி முறை பழைய காலத்தை சேர்ந்தது. அவரது பேட்டிங்கும் நிதானமாகத் தான் இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் அதிரடி முயற்சிகளை எல்லாம் செய்ய மாட்டார். ஆனால், அதை வைத்துக் கொண்டே புகழ் பெற்றார் மிஸ்பா.

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் நிலை

உலகக்கோப்பை தொடருக்குப் பின் பாகிஸ்தான் அணியின் நிலை மோசமடைந்துள்ளது. உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணியை வறுத்து எடுத்தனர் ரசிகர்கள். ஊடகங்களும் அடி மட்டம் வரை இறங்கி விமர்சனம் செய்தது.

பயிற்சியாளர், தேர்வாளர் தேவை

பயிற்சியாளர், தேர்வாளர் தேவை

இந்த நிலையில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் பதவிகள் நீட்டிக்கப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த இரு பதவிகளும் காலியாக உள்ளன. பிரதமர் இம்ரான் கான், நாட்டின் கிரிக்கெட் அணியை சிறப்பானதாக மாற்றிக் காட்டுகிறேன் என சவால் வேறு விட்டுள்ளார்.

மிஸ்பாவுக்கு தூது

மிஸ்பாவுக்கு தூது

இந்த நிலையில், முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தான் அணியை உருமாற்றி வழிநடத்த சரியான ஆள் என முடிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அவருக்கு ஒரே சமயத்தில் தேர்வுக் குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் பதவியை தர முன் வந்தது.

பதவிக்கு மறுப்பு

பதவிக்கு மறுப்பு

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கிரிக்கெட் வீரர்கள் குறித்து எடுக்கும் சில முடிவுகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் தனக்கு பதவி வேண்டாம் என அவர் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. உதாரணமாக, சில முக்கிய வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட சிறு உள்காயங்களுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு டி20 தொடர்களில் ஆட அனுமதி அளிக்கக் கூடாது என்கிறார் மிஸ்பா.

தற்காலிக பதவி

தற்காலிக பதவி

அவரது எண்ணங்கள் நிறைவேறாது என்பதே தெரிந்த நிலையில், அவர் தற்போது தற்காலிகமாக வீரர்கள் பயிற்சி முகாமை மேற்பார்வையிடும் பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரை சமாதானம் செய்து பயிற்சியாளர் பதவியை கொடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி ஜாகிர் கான் முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Wednesday, August 21, 2019, 18:00 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
PCB planning to make Misbah Ul Haq as head coach and Chief selector
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X