For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் முன்னேற்றத்தை தடுக்கும் பாகிஸ்தான்.. பிசிசிஐ-க்கு எதிராக பெரும் திட்டம்.. ஜூலையில் உள்ள சவால்

லாகூர்: ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ போட்டுள்ள திட்டத்தை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 2023 - 2027ம் ஆண்டு வரையிலான தொலைக்காட்சி உரிமை ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையின் மூலம் மட்டும் பிசிசிஐ ரூ.48,390 கோடி வருமானம் ஈட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் அதிகரிப்பு

ஐபிஎல் போட்டிகள் அதிகரிப்பு

கடந்த 5 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளின் தொகை இவ்வளவு அதிகமாகியுள்ளதற்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்களும் காரணமாகும். அதாவது ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் 74 ஆக உயர்த்திருந்தனர். இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் 94 போட்டிகளாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏலம் எடுத்துள்ளனர்.

போட்டி நாட்கள் அதிகரிப்பு

போட்டி நாட்கள் அதிகரிப்பு

போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதால், ஐபிஎல் தொடரின் நாட்களும் கட்டாயமாக அதிகப்படுத்தியே தீர வேண்டும். இதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தொடரின் காலத்தை இனி இரண்டரை மாதங்களாக உயர்த்தப்படும். இதுகுறித்து மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறியிருந்தார்.

 பாகிஸ்தான் வாரியம் எதிர்ப்பு

பாகிஸ்தான் வாரியம் எதிர்ப்பு

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்தியுள்ளது. அதாவது சர்வதேச அளவில் கலக்கி வரும் முன்னணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் இரண்டரை மாதம் இருந்துவிடுவார்கள். இதுமட்டுமல்லாமல் மற்ற நாட்டு தொடர்களும் உள்ளன. அப்படி இருக்கையில் இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் பாதிக்கப்படும் என்றும், அதன் அளவுகள் குறையும் எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் நடவடிக்கை

பாகிஸ்தானின் நடவடிக்கை

வரும் ஜூலை மாதம் ஐசிசி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் குறித்து முடிவெடுக்கப்படும். ஐபிஎல் தொடர் இரண்டரை மாதங்களாக நீட்டிக்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

Story first published: Thursday, June 16, 2022, 11:18 [IST]
Other articles published on Jun 16, 2022
English summary
PCB Takes a action against BCCI for the extension idea of IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X