For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேள தாளங்கள் முழங்க.. சாரட் வண்டியில் மிதந்தபடி வந்த நடராஜன்.. சின்னப்பம்பட்டி மக்கள் மாஸ் வரவேற்பு

சேலம்: ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி தமிழகம் திரும்ப உள்ள நடராஜனுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்க சின்னப்பம்பட்டி கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Recommended Video

சாரட் வண்டியில் மிதந்தபடி வந்த நடராஜன்.. சின்னப்பம்பட்டி மக்கள் மாஸ் வரவேற்பு - வீடியோ

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் நெட் பவுலராக அறிமுகம் ஆன நடராஜன் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, மூன்று டி 20 போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி இவர் கவனம் ஈர்த்தார்.

அதிலும் டி 20 தொடரில் இந்திய அணி வெற்றிபெற நடராஜன் மிக முக்கியமான காரணமாக இருந்தார் . இவர் மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து மேலே வளர்ந்து வந்தவர்.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் இவரின் தாய் ரோட்டுக்கடை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி உள்ள நடராஜன் சேலத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இவர் தொடர்ந்து வாய்ப்பு பெறுவார் என்றும் கருதப்படுகிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி தமிழகம் திரும்ப உள்ள நடராஜனுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்க சின்னப்பம்பட்டி கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். பேருந்து நிலையத்தில் இருந்து மேள தாளங்களுடன் இவருக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

இதை காணும் ஆவலோடு அவர் தமிழகம் திரும்புகிறார். இதற்காக சேலத்தில் பல இடங்களில் பெரிய அளவில் கட் அவுட் பேனர்கள் வைக்கப்பட்டு நடராஜனை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேள தாளங்கள் முழங்க உடலில் தேசிய கொடி போர்த்தியபடி சாரட் வண்டியில் மக்கள் வெள்ளத்தில் நடராஜன் மிதந்தப்படி வந்தார்.

ஏன் மறுப்பு

நடராஜனை காண மக்கள் பலரும் கூடுவார்கள். கூட்டம் அதிகம் ஆகும். கொரோனா காலத்தில் இது சிக்கலாகும். நடராஜனுக்கு இது சிக்கலாகும் வாய்ப்பு உள்ளது. அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி உள்ளதால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Story first published: Thursday, January 21, 2021, 18:24 [IST]
Other articles published on Jan 21, 2021
English summary
Not much celebrations were allowed to receive Natarajan in Salem due to Corona surge fear.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X