ஹைதராபாத்திலிருந்து சிட்னிக்கு பறந்த போன் கால்.. சிராஜை சிகரம் தொட வைத்த அந்த சம்பவம்.. பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் எடுக்க தனது தாயார் கொடுத்த நம்பிக்கைதான் முக்கிய காரணம் என்று முகமது சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி ஆடி வரும் முகமது சிராஜ் தற்போது சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இவர் ஒரு விக்கெட் எடுத்தார்.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்த சிராஜ் மொத்தமாக ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்ஜியத்தை சாய்த்தார். தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே சிராஜ் இந்த சாதனையை செய்துள்ளார்.

2021 ஆசியா கோப்பையிலுருந்து விலக முடிவு.. இந்திய அணி திடீர் திட்டம்.. யாருக்கு வைக்கப்பட்ட செக்!?

எப்படி

எப்படி

ஆஸ்திரேலிய தொடரில் இவர் இணைந்து சில நாட்களில் இவரின் அப்பா மரணம் அடைந்தார். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சிராஜை கிரிக்கெட் ஆட ஊக்குவித்தது இவரின் அப்பாதான். அப்பாவின் மரணத்திற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் தங்கி ஆடிய சிராஜ் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த நிலையில் சிராஜ் தனது தாயார் குறித்து முக்கியமான விஷயம் ஒன்றை இன்றைய போட்டிக்கு பின் பகிர்ந்து உள்ளார். அதில். இந்திய அணியில் என் அப்பாவின் மரணத்திற்கு பின் மனதளவில் நான் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன். எனக்கு ஆட்டம் மீது கவனம் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

கஷ்டம்

கஷ்டம்

இந்தியாவிற்கு திரும்புவது குறித்தும் யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் என் அம்மாவிடம் பேசிய பின் நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். அந்த போன் கால்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. என் அம்மா எனக்கு நம்பிக்கை கொடுத்தார். எனக்கு மன ரீதியான நம்பிக்கை என் அம்மாதான் எனக்கு வழங்கினார்.

அம்மா

அம்மா

என் அம்மாவிடம் இருந்து வந்த அந்த போன் கால்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இப்போது நான் விக்கெட் எடுக்கவும் இதுவே காரணம். எனக்கு ஆதரவு அளித்தவர்கள், உறுதுணையாக நின்றவர்கள், வாய்ப்பு கொடுத்தவர்கள் எல்லோருக்கும் நன்றி என்று சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Phone call from his mother helped him to achieve 5 haul mark for Mohammed Siraj after his father death.
Story first published: Monday, January 18, 2021, 14:53 [IST]
Other articles published on Jan 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X