For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருப்தி இல்லாம தேர்வு செய்த தேர்வாளர்கள்... வேற லெவல் சாதனை செய்து நிரூபித்த வீரர்கள்!

சிட்னி : ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்துள்ள குறைந்த ஓவர்கள் போட்டிகளின் ஹீரோக்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடராஜன் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர்.

மைதானத்தில் இவர்களின் செயல்பாடுகளை கண்டு வாய் பிளக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

ரிட்டயரின் போது இப்படி பேசாலாமா? வாய்ப்பு கொடுத்த கோலிக்கே ஆப்பு வைத்த பர்தீவ்.. என்ன சொன்னார்? ரிட்டயரின் போது இப்படி பேசாலாமா? வாய்ப்பு கொடுத்த கோலிக்கே ஆப்பு வைத்த பர்தீவ்.. என்ன சொன்னார்?

இந்நிலையில் இந்த தொடர்களுக்காக இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுக்க தேர்வாளர்கள் முன்னதாக தயாராக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையும் மீறி இவர்கள் சாதித்து காட்டியுள்ளனர்.

சாதித்த பாண்டியா, நடராஜன்

சாதித்த பாண்டியா, நடராஜன்

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடர்களில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடராஜன் இருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். நடராஜன் இந்த தொடர்களின்மூலம் சர்வதேச அளவில் தன்னுடைய முதல் போட்டிகளில் விளையாடினார்.

வியப்பிற்குள்ளாக்கிய சாதனை

வியப்பிற்குள்ளாக்கிய சாதனை

ஒருநாள் தொடரின் 3வது போட்டியில்தான் களமிறங்கினார் நடராஜன். ஆயினும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து டி20 தொடரிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை 'கப்'பென பிடித்துக் கொண்டு இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சாதித்த ஹர்திக் பாண்டியா

சாதித்த ஹர்திக் பாண்டியா

இதேபோல ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இரு தொடர்களிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இரண்டு போட்டிகளில் 90ஐ தாண்டியது இவரது ஸ்கோர். மற்ற போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். ஒருநாள் போட்டியில் 4 ஓவர்களை மட்டுமே போட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்வானார்.

மாற்று வீரராக தேர்வு

மாற்று வீரராக தேர்வு

முன்னதாக குறைந்த ஓவர்கள் போட்டிகளில் இவர்கள் இருவரையும் தேர்வு செய்ய தேர்வாளர்கள் தயாராக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பௌலிங்கை மேற்கொள்ளாத ஹர்திக் பாண்டியாவை வெறுமனே பேட்ஸ்மேனாக மட்டும் தேர்வு செய்ய அவர்கள் தயாராக இல்லை என்றும் ஆயினும் மாற்று வீரர் என்ற கோணத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

திருப்தியற்ற நிலையில் தேர்வு

திருப்தியற்ற நிலையில் தேர்வு

இதேபோல நெட் பயிற்சிகளுக்காக மட்டுமே நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்றிருந்தார். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் இவர்களை திருப்தியற்ற நிலையிலேயே தேர்வாளர்கள் தேர்வு செய்ததாகவும், ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தற்போது இவர்கள் நிரூபித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறப்பான 2020 ஆண்டு

சிறப்பான 2020 ஆண்டு

அடுத்ததாக வரும் டி20 உலக கோப்பையிலும் இவர்கள் இருவரும் கண்டிப்பாக இடம்பெறும்வண்ணம் இவர்களது செயல்பாடுகள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த இரண்டு தொடர்களில் இருந்தது. இந்த 2020 ஆண்டு இவர்கள் இருவருக்கும் மிகவும் சிறப்பாகவே இருந்தது. இந்திய அணியில் இவர்களுக்கு நிலையான இடம் காத்திருக்கிறது.

Story first published: Thursday, December 10, 2020, 13:07 [IST]
Other articles published on Dec 10, 2020
English summary
Pandya bowled four overs in the second ODI at the SCG and picked two wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X